பிரபாஸுக்கு என்னதான் ஆச்சு... ஏன் இப்படி ஆயிட்டாரு… ரசிகைகள் கவலை !
சென்னை : பாகுபலி புகழ் பிரபாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரகிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
அந்த புகைப்படத்தில் பிரபாஸ் ஏகத்திற்கும் உடல் எடை கூடி இருப்பதுதான் ரசிகைகளின் கவலைக்கு காரணம்.
ராஜமவுலி படத்துல நடிக்கிற ஹீரோக்களுக்கு கொஞ்ச நாளில், லுக்கே போயிடுதே ஏன் இணையத்தில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பாகுபலி
நடிகர் பிரபாஸ் சில ஆண்டுகளுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே பிரபலமான நடிகராக இருந்து வந்தார். ஆனால், பாகுபலி அனைத்தையும் மாற்றியது. பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றி, அவரை இந்தியா முழுவதும், இந்தியா தாண்டியும் அறியவைத்தது. இதனால் தற்போது தெலுங்கு, தமிழைத் தாண்டி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

பான் இந்திய திரைப்படமாக
இதன் காரணமாக இப்போது தெலுங்கு மொழி மட்டும் இல்லாமல் தமிழ், இந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தனது படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக வெளியான 'சாஹோ' இந்தியா முழுவதும் 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியானது. பிரபாஸ் தற்போது நடித்து வரும் ரதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் கூட பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது.

100 கோடி சம்பளம்
பாகுபலி வெளியானதிலிருந்தே இந்திய சினிமாவில் பிரபாஸுக்கு நல்ல மவுசு இருந்து வருகிறதாக கூறப்படுகிறது. அவரின் திரைப்படங்கள் மொழியைப் பொருட்படுத்தாமல், வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் சமமான நிலையில் படங்கள் ஓடும் ஒரு நிலையை எட்டியுள்ளது. பிரபாஸ் கடைசியாக நடித்த சாஹோ படத்துக்கு ரூ.100 கோடி ஊதியம் பெறுகிறார் என பரவலாக தகவல்கள் பரவின.

தாறுமாறான எடையுடன்
இந்நிலையில்,இணையத்தில் பிரபாஸின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் பிரபாஸ் தாறுமாறாக உடல் எடை கூடி உள்ளார். பாகுபலி படத்தில், வாட்ட சாட்டமாக இருந்து பெண்களின் மனம் கவர்ந்த பிரபாஸ் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று அவரின் தீவிர ரசிகைகள் கேட்டு வருகின்றனர். மேலும் பிரபாஸின் தீவிர ரசிகை பிரபாஸ் டார்லிங்... 50வயது அங்கிள் மாதிரி இருங்கீங்க ஏன் இப்படி ஆய்ட்டீங்க என்ற மிகுந்த வருத்தத்துடன் கேட்டு இருக்கிறார்.

ஹீரோ லுக்கே இல்லையே
இப்பெல்லாம் ராஜமவுலி படத்துல நடிச்சா ஹீரோக்கு லுக்கே போயிடுதே ஏன் என்றும், இந்திய லெவல்ல பெரிய மார்க்கெட் கிடைச்சாலும் லுக்ல எதோ பாதிப்பு உண்டாகுது. பாகுபலிக்கு அப்புறம் பிரபாஸின் முகமே மாறிடுச்சு. இப்ப Jr.NTR & ராம்சரண் முகமும் முத்தி போன மாதிரி ஆகிவிட்டது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ராதே ஷ்யாம் விரைவில் ரிலீஸ்
நடிகர் பிரபாஸ் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிந்த நிலையில், பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஆதிபுருஷ்
பிரபாஸின் 22வது படமான ஆதிபுருஷ் படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக, சையது அலி கான் நடித்து வருகிறார். 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக உள்ளது. இத்திரைப்படம் 2023ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று படங்களையும் முழுமையாக முடித்துக் கொடுத்த பிறகு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ்.


Click it and Unblock the Notifications