மகன் சாட்சியாக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. வைரலாகும் லிப்லாக் போட்டோஸ்!
சென்னை: மகன் ஆசைப்பட்டதால் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
கன்னட சினிமாவின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கன்னடத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான முத்தின ஹார படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் பிரகாஷ் ராஜ்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சினிமாத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவாக உள்ளார். நடிகராக மட்டுமின்றி, இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பல மொழி படங்களில் பர்ஃபாமன்ஸ்
ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நுற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், இந்தி, மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார்.

5 முறை தேசிய விருதுகள்
மேலும் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழில் இருவர், தயா, காஞ்சிவரம் ஆகிய படங்களுக்கும் தெலுங்கில் அந்தப்புரம் படத்திற்கும் கன்னடத்தில் வெளியான புட்டக்கனா ஹைவே படம் என 5 படங்களுக்கு 5 முறை தேசிய விருதுகள் வென்றுள்ள பிரகாஷ் ராஜ், 6 முறை நந்தி விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் விருதுகள் பிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

மகன் மரணம் - விவாகரத்து
நடிகர் பிரகாஷ் ராஜ் 1994ஆம் ஆண்டு கன்னட நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள் மற்றும் சித்து என்ற ஒரு மகனும் இருந்தனர். மகன் சித்து கடந்த 2004ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

போனி வெர்மாவுடன் இரண்டாவது திருமணம்
பின்னர் நடன இயக்குநரான போனி வெர்மாவுடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு போனி வெர்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர்களுக்கு 6 வயதில் வேதந்த் என்ற மகன் உள்ளார்.

11ஆம் ஆண்டு திருமண நாள்
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று தனது 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது மனைவிக்கு வாழ்த்து கூறி டிவிட்டியிருந்தார். அதில் சிறந்த தோழியாகவும், காதலியாகவும், சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிற தனது அன்பு மனைவிக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.

மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம்
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது மனைவி போனி வெர்மாவை மூன்றாவது முறையாக மீண்டும் திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மோதிரம் மாற்றி லிப்லாக்..
மேலும் மகன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் போட்டோ, இருவரும் லிப்லாக் கொடுத்துக் கொள்ளும் போட்டோ, மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோ என அனைத்து போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட நபர்
அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் போனி வெர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. போட்டோக்களை பார்த்த சில நெட்டிசன்கள், நீங்கள் ரொம்பவே ஆசிர்வதிக்கப்பட்ட நபர், 50 வயதை கடந்த போதும் இளம் பெண்ணுடன் மீண்டும் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என கிண்டலடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











