அதிகாலையிலேயே ஜிம்மில் பாஸ் உடன் மீட்டிங்.. போட்டோவை ஷேர் செய்து நெகிழ்ந்த பிரகாஷ் ராஜ்!
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகருடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நெகிழ்ந்துள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கன்னடத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான முத்தின ஹார படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் பிரகாஷ் ராஜ்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சினிமாத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். நடிகராக மட்டுமின்றி, இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார்.

பல மொழிகளில் பல படங்கள்
ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நுற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரள விட்டு வருகிறார். இதேபோல் பல ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

5 முறை தேசிய விருது
மேலும் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழில் இருவர், தயா, காஞ்சிவரம் ஆகிய படங்களுக்கும் தெலுங்கில் அந்தப்புரம் படத்திற்கும் கன்னடத்தில் வெளியான புட்டக்கனா ஹைவே படம் என 5 படங்களுக்கு 5 முறை தேசிய விருதுகள் வென்றுள்ள பிரகாஷ் ராஜ், 6 முறை நந்தி விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் விருதுகளை 8 முறையும், தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளை 5 முறையும் பெற்றுள்ளார். மேலும் SIIMA, CineMAA மற்றும் விஜய் விருதுகளையும் குவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

முதல் மனைவி விவாகரத்து - 2வது திருமணம்
பிரகாஷ் ராஜ் 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள் மற்றும் சித்து என்ற ஒரு மகனும் இருந்தனர். மகன் சித்து கடந்த 2004ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு நடன இயக்குநரான போனி வெர்மாவை கடந்த 2009ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தோள் பட்டையில் எலும்பு முறிவு
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடது கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஹைத்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரகாஷ் ராஜ்.
Recommended Video

தி டெவில் இஸ் பேக்
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கையில் கட்டுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த பிரகாஷ் ராஜ், தி டெவில் இஸ் பேக் என பதிவிட்டிருந்தார்.

நடிகர் சிரஞ்சீவியுடன் இருக்கும் போட்டோ
தொடர்ந்து ஹைத்ராபாத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா
மேலும் அந்த போட்டோவுக்கு ஜிம்மில் BOSS உடன் அதிகாலை சந்திப்பு. திரையுலக சகோதரர்களுக்கான தீர்வுகளைக் காண முன்முயற்சி எடுத்ததற்காக அவருக்கு நன்றி.. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா.. அவரைப் பெறுவதில் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

இருவருக்கும் வாழ்த்து - வைரலாகும் போட்டோ
இந்த போட்டோவிலும் பிரகாஷ் ராஜ் கையில் கட்டுடன் உள்ளார். அவரது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











