Don't Miss!
- News
26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.. தமிழகத்தின் வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது!
- Finance
அய்யோ இது மட்டும் நடந்திட கூடாது.. இந்திய மக்கள் பீதி..!
- Lifestyle
இந்த விஷயங்கள படுக்கையில் செய்வதன் மூலம் நீங்க வேற லெவலில் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாமாம்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்... திருமணம் எப்போ தெரியுமா ?
சென்னை : நடிகர், தயாரிப்பாளரான தியாகராஜனின் மகன் பிரசாந்த். வழக்கமாக மற்ற நடிகர்களை போல் தியாகராஜகனும் தனது மகனை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். தனது 17 வது வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பிரசாந்த்.
முதல் படமே ஹிட் படமானதால் பல டைரக்டர்களும் பிரசாந்த்தை தேடி வந்து வாய்ப்பு கொடுத்தனர். 1990, 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த பிரசாந்த், பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா, ஷங்கரின் ஜீன்ஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
குஷியில் டாப் ஸ்டார் ரசிகர்கள்.. பிரசாந்த்-சிம்ரன் நடிப்பில்

விவாகரத்தில் முடிந்த திருமணம்
2005 ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் திருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்று, இவர்கள் பிரிந்தனர். விவாகரத்து தொடர்பாக பல சிக்கல்கள், வதந்திகளில் சிக்கினார் பிரசாந்த். 2005 ம் ஆண்டு நடித்த லண்டன் படத்திற்கு பிறகு பிரசாந்த் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை.

அந்தகன் மூலம் ரீஎன்ட்ரி
இதனால் பிரசாந்த் என்ற ஒரு நடிகர் இருப்பதையே ரசிகர்கள் மறந்து போகும் நிலைக்கு ஆளானார் பிரசாந்த். அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடிப்பதுடன், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார் பிரசாந்த். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம்
48 வயதாகும் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். முதல் திருமணம் தோல்வி அடைந்ததுடன், சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றுள்ளார் பிரசாந்த். இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம். விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை தியாகராஜன் வெளியிட போகிறாராம்.

எப்போ திருமணம்
இந்த ஆண்டு இறுதிக்குள் பிரசாந்த்தின் திருமணம் நடைபெற உள்ளதாம். பெண் பார்த்து முடிவு செய்த விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள பிரசாந்த்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பிரசாந்த் தோல்வி அடைந்துள்ளார்.