»   »  நாள், நட்சத்திரம் பார்த்து... ட்விட்டர், பேஸ்புக்கில் இணைந்த லாரன்ஸ்

நாள், நட்சத்திரம் பார்த்து... ட்விட்டர், பேஸ்புக்கில் இணைந்த லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுநாள்வரை எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இணையாமல் இருந்த ராகவா லாரன்ஸ், தனது பிறந்த நாளான இன்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்.

மேலும் தான் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தனது பிறந்த நாளில் தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு தான் அளிக்கும் பரிசு என்று இதனை தெரிவித்திருக்கிறார்.

Actor Raghava Lawrence Today Joined Facebook, Twitter

இதுகுறித்து அவர் கூறும்போது " என் நண்பர்கள், ரசிகர்கள் என்று எல்லோருமே ஏன் நீங்க சமுக வலைதளங்களில் இருக்குறது இல்லை என்று கேட்கிறார்கள். நீங்க என்ன நல்ல விஷயம் பண்றீங்க மற்றும் உங்க படம் பற்றியும் தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறோம் என்றும் சொன்னார்கள்.

நல்ல நாள் பார்த்து சமுகவலைதளத்தில் இணைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். இன்று என்னுடைய பிறந்தநாள், அதனால் இன்றே இணைந்து விட்டேன்.

இனிமேல் என் தொண்டு நிறுவனம் மூலமா நான் என்னசெய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமின்றி என்னுடைய அடுத்த படங்கள் பற்றியும் இனி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

என் ரசிகர்கள் எங்கேயோ இருக்க, நான் எங்கேயோ இருக்கிறேன். பேஸ்புக், ட்விட்டர் மூலமாக அவர்களுடன் இணைந்திருக்கலாம். எதுவும் அவசர உதவிகள் கூட தேவைப்படலாம், அதற்கும் இந்த பேஸ்புக் பயன்படும்" என்று லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸை நடிகர் சிவகார்த்திகேயன், எடிட்டர் பிரவீன் ஆகியோர் வரவேற்று இருக்கின்றனர்.

லாரன்ஸ் இன்று தனது பிறந்தநாளை தான் படிக்க வைக்கும் 400 குழந்தைகளுடன் அம்பத்தூரில் உள்ள, ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Raghava Lawrence Enters The Social Networking Sites. He Tweeted "Hello Twitter friends! This is me offl_Lawrence joining Twitter to interact and share information about me with you.My birthday gift to my friends and fans".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil