கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்க.. நயன்தாரா வரலையே.. டியூட் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார் பேச்சு
சென்னை: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் டியூட்' . இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் 17ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதீப், மமிதா பைஜூ, சரத்குமார், இயக்குநர் கீர்த்திஸ்வரன், தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர். இதில் சரத்குமார் கலந்து கொண்டு கலகலப்பாக பல விஷயத்தி பேசினார்.
சரத்குமார் பேசுவதற்காக மேடைக்கு வந்ததும் தொகுப்பாளினி பிரியங்கா, ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள், கிஸ் கொடுங்கள் என்று கூறினார். அப்போது சரத்குமார் யாரை கட்டி பிடிக்க வேண்டும் என கேட்டார். உடனே பிரியங்கா யாரை வேண்டுமானாலும் கட்டிப்பிடித்துக்கொள்ளுங்கள் சார், தப்பே இல்லை என கூறினார். அப்போது சரத்குமார் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு, அனைவருக்கும் வணக்கம் தொடங்கினார். அப்போது, ஐயா திரைப்படத்தில் வரும் 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்ற பாடலை போடப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்ட சரத்குமார் நயன்தாரா வரவில்லையே என கேட்டார்.

சரத்குமார் கலகல பேச்சு: இதைத்தொடர்ந்து மீண்டும் பேச தொடங்கிய சரத்குமார், முதலாவதாக கன்னட சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கும் "மைத்தி பிக்சர்ஸ்" தயாரிப்பு நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது உங்களுடைய இரண்டாவது படம், இதுபோல பல படத்தை தயாரித்து நீங்கள் பெயர் எடுக்க வேண்டும் என்றார். இந்த படத்தின் கதையை சொல்ல வேண்டாம் என இயக்குனர் சொல்லி இருக்கிறார். அதனால், இந்த படத்தின் கதை பற்றி சொல்ல மாட்டேன் ட்ரைலர் பார்த்து இருப்பீர்கள் உண்மையிலேயே படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகன் நிச்சயமாக ஒரு பிக் ஸ்டாராக வருவார். ரசிகர்களின் மனதில் அவர் ஒரு நல்ல இடத்தை பிடித்து இருக்கிறார். எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இயக்குனரும், நடிகருமாக பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
நல்ல கதாபாத்திரம்: இந்த திரைப்படத்தின் கதை பற்றி இயக்குனர் என்னிடம் சொன்னார். அப்போது பிரதீப் ரங்கநாதனுக்கு நீங்கள் தந்தையாக நடிக்க வேண்டும் என சொன்னார். உடனே நான் அங்கிளாக நடிப்பது, பெண்ணிற்கு அப்பாவாக நடிக்கும் கதாபாத்திரத்தை எல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். நான் இதற்கு முன் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை என்றேன். அதன் பிறகு கதையை கேளுங்கள் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்றார். அதன் பிறகு தான் கதையைக் கேட்டேன் கதை உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நிச்சயமாக புதிய ஒரு சரத்குமாரை காண்பீர்கள், இப்படி ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் கீர்த்தி எனக்கு கொடுத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.17ந் தேதி தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள். படத்தை பார்த்துவிட்டு படம் அப்படி இருக்கு, இப்படி இருக்கு என்று சொல்லாதீங்க, ஏன் என்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பார்வை இருக்கும் என்று சரத்குமார் பேசினார்.


Click it and Unblock the Notifications











