அஜித் சாருக்கும் கடன் இருந்துச்சு... இன்னைக்கு பெரிய ஆளா வந்திருக்கார்... பிரபல நடிகர் பெருமிதம்!
சென்னை: நடிகர் அஜித்துக்கும் கடன் பிரச்சனை இருந்தது ஆனால் அதை எல்லாம் மீறி தற்போது அவர் பெரிய ஆளாக உயர்ந்துள்ளார் என நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம், சுந்தர பாண்டியன், போராளி, குட்டிப்புலி, கிடாரி, வெற்றி வேல் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

பல படங்கள் கைவசம்
கடைசியாக அவரது நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு-2, நாநா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சசிகுமார்.

ரிலீஸுக்கு தயார்
இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. நடிகர் சசிகுமார் இயக்குநர் கதிர்வேல் இயக்கும் ராஜவம்சம் படத்திலும், இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய இரு படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

நவம்பர் 26ஆம் தேதி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் படம் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சசிகுமாரின் மற்றொரு படமான ராஜவம்சமும் அதே தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளது.
Recommended Video

சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி
இந்நிலையில் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான எம்ஜிஆர் மகன் திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அஜித்துக்கும் கடன் இருந்தது
இந்நிலையில் நடிகர் சசிகுமார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் அஜித் குறித்து பெருமிதமாக பேசியுள்ளார். தனக்கு உள்ள கடன் குறித்து பேசியுள்ள நடிகர் சசிகுமார், தல அஜித்திற்கும் இது போல கடன் இருந்ததாகவும், அந்த கடன்களை அடைக்க அஜித் தொடர்ச்சியான படங்களில் நடித்தது குறித்தும் கூறியுள்ளார்.

பெரிய ஆளாக உள்ளார்
இது அப்போதைய காலக்கட்டத்தில் அஜித்தின் படங்களை ரசிக்கும் ரசிகனாக தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடன்களை எல்லாம் மீறி தல அஜித் இன்று அடைந்துள்ள இடம் மிகப்பெரியது என்றும் கூறியுள்ளார். இதேபோல் சமுத்திரக்கனியுடனான நட்பு மற்றும் இயக்குநர் பொன்ராம் குறித்தும் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் சசிகுமார்.


Click it and Unblock the Notifications











