ஆஹா.. ரொம்ப தாகமா இருக்கே... வெயிலுக்கு இதமாக இளநீர்..சிபி அசத்தல்!
சென்னை : சிபிராஜ் தனது இன்டாகிராம் பக்கத்தில் வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சத்தியராஜின் மகனான இவர், ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது கால் நடத்தை பதித்தார். அதன் பிறகு ஜோர், மன்னாதி மன்னன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் ஒரு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. அதையடுத்து, தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடத்து வருகிறார்.

அப்பாவும் மகனனும்
சத்திய ராஜூம் , சிபியும் இணைந்து நடித்த கோவை பிரதர்ஸ் திரைப்படம் ஒரு நகைச்சுவைப்படமாக அமைந்தது. இருந்த போதும் சிபிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக ஒன்றும் கிடைக்க வில்லை. அடுத்தடுத்து வெளியான படங்களும் தோல்வியை சந்தித்தன.

ஒரு கம்பேக்
நீண்ட இடைவேளைக்கு பிறகு 2010ம் ஆண்டு வெளியான நாணயம் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்டபடமாக அமைந்தது. அந்த படம் சிபிக்கு ஓரளவு நற் பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக, நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் சிபிக்கு ஒரு கம்பேக் திரைப்படமாகவே அமைந்தது அந்த படத்தைத் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நல்ல பெயர்
அதைத்தொடர்ந்து ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா, சத்தியா , வால்டர் என தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் வெளியான கபடதாரி திரைப்படம் கொலையை கண்டுபிடிக்கும் த்ரில்லர் திரைப்படமாக அமைந்து இவருக்குமேலும் நற் பெயரை பெற்றுத்தந்துள்ளது.

இதமாக இளநீர்
இணையத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டுவரும் சிபிராஜ் தற்போது வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை போட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











