Just In
- 1 hr ago
போலி இ-மெயில் விவகாரம்.. கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஹிரித்திக் ரோஷன்.. பாலிவுட் பரபரப்பு!
- 1 hr ago
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- 2 hrs ago
நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு!
- 2 hrs ago
ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!
Don't Miss!
- News
TN Assembly Election Live Updates: அதிமுக- பாமக தொகுதி பங்கீடு இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Sports
கடைசி மேட்சில் ஆட முடியாது.. திடீரென வந்து சொன்ன பும்ரா.. அணியில் இருந்து விலகல்.. என்ன நடந்தது?
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாரணாசியில் விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றிய நடிகர் சிம்பு!
சென்னை : நடிகர் சிம்பு வாரணாசியில் உள்ள கங்கை நதியில் விளக்கேற்றி பூஜை செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஈஸ்வரன் படம் நினைத்தது போலவே திரையரங்கில் வெளியாகி வெற்றியும் பெற்ற நிலையில் இப்பொழுது மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
காதலர் தினத்திற்கு தன்னுடைய செல்ல நாய்க்குட்டியுடன் காதலி இல்லை புழம்பித் தவித்த சிம்பு இப்போது வாரணாசியில் வேண்டுதலை நிறைவேற்றி விளக்கேற்றிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

நிம்மதிப் பெருமூச்சுடன்
எப்பொழுதும் சிம்புவைப் பற்றி பரபரப்பான சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது இவரைப்பற்றி அனைத்தும் நல்ல செய்திகளாகவே வந்துகொண்டிருக்க நிம்மதிப் பெருமூச்சுடன் ரசிகர்கள் உள்ளனர். வந்தா ராஜாவை தான் வருவேன் படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருந்த சிம்பு மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில்
ஆரம்பமே அதிரடியாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தில் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த சிம்பு படத்தை குறித்த நேரத்தில் திரையரங்குகளில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் மற்றுமொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இயக்கி வந்த மாநாடு பல வருடங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்க இப்பொழுது முழு வீச்சுடன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது இதன் டீசர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல பத்து தல படத்திலும் சிம்பு நடித்து வருகிறார் இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

கங்கை நதியில்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் புழம்பித் தவித்த சிம்பு அதில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை நீ மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிக்க தயாராய் இருக்க அது கூடாது நான் பண்ணிக்கிட்டா தான் நீயும் பண்ணிக்கனும் என கூறியிருந்த வீடியோ செம வைரல் ஆனது. இந்த நிலையில் இப்போது வாரணாசியில் உள்ள கங்கை நதியில் படகில் உட்கார்ந்தவாறு விளக்குகளை நதியியில் ஒன்றன்பின் ஒன்றாக விட்டு வேண்டுதலை நிறைவேற்றிய புகைப்படங்களை சிம்புவை இப்பொழுது பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் திருமண வேண்டுதலா எனக் கேட்டு வர இந்த புகைப்படங்கள் சென்ற ஆண்டு எடுக்கப்பட்டது என சிம்பு அதில் குறிப்பிட்டுள்ளார்.