»   »  கெட்டவன்னு பேரெடுத்த நல்லவரே.. பிறந்தநாளில் சிம்புவைக் கொண்டாடும் ரசிகர்கள்

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவரே.. பிறந்தநாளில் சிம்புவைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தனது 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் சிம்புவிற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கூறிவருகின்றனர்.

இதனால் தற்போது ட்விட்டரில் #HappyBirthdaySTR என்னும் ஹெஷ்டேக் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் குவிந்த ரசிகர்களின் பிறந்தநாள் பதிவுகளில் ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ரசிகர்கள்

நேற்றிரவு சிம்பு தனது ரசிகர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியதை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார் ஆத்விக்.

கெட்டவன்னு

"கெட்டவன்னு பெரேடுத்த நல்லவரே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்ன தல" என்று சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் பத்மஸ்ரீ.

உயிரக் கொடுக்குற

"சிம்புவுக்காக உயிர கொடுக்குற அளவுக்கு நான் ரசிகன் கிடையாது ஆனா உயிர் இருக்குற வரைக்கும் சிம்பு ரசிகன் தான்" என்று பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் கார்த்தி.

விடிவி கார்த்தி

"விடிவி கார்த்திக் கதாபாத்திரத்த சிம்புவ தவிர யாராலயும் அந்த அளவு பண்ணிருக்க முடியாது" என்று சிம்புவைப் புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் ரிவால்வார்.

நயன்தாராவையே

"நயன்தாரா பின்னாடி சுத்ததா ஆளே இல்ல அந்த நயன்தாராவயே தன் பின்னாடி சுத்த வைச்ச முத ஆளு சிம்பு தான்"...என்று சிம்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருக்கிறார் ராஜ்.

இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இது நம்மஆளு படத்தின் இசை மற்றும் பாடல்களை படக்குழுவினர் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Today Actor Simbu Celebrating His 33 Birthday with Friends and Family Members.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil