வச்சிக்கிறேண்டா, வச்சிக்கிறேன்.. யுவன் ஷங்கர் ராஜா புரொடக்‌ஷன்ஸ் தானே.. சிவா செம டென்ஷன்!

யுவன் ஷங்கர் ராஜாவிடம் நீதிகேட்கும் விதமாக நடிகர் சிவா வீடியோ வெளியிட்டுள்ளோர்.

Recommended Video

பியார் பிரேமா காதல் படத்தை வச்சி செய்யும் மிர்ச்சி சிவா- வீடியோ

சென்னை: "அகில உலக சூப்பர் ஸ்டார்" (அட நம்ம மிர்ச்சி சிவாதாங்க) கோபமாக யுவன் ஷங்கர் ராஜாவிடம் நியாயம் கேட்கும் வகையில் பேசும் ஒரு கலாய் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தின் மிர்ச்சி சிவா நடித்து வெளியான தமிழ்ப்படம் 2 மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிவா, யுவன்ஷங்கர் ராஜா பற்றி "கோபமாக" பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Actor Siva seeks Justice from Yuvan!

அதில் "என்னது பியார் பிரேமா காதல் இன்னும் 9 நாள்ல ரிலீஸா? என்ன வச்சு படம் புரொட்யூஸ் பன்றேன்னு சொல்லிட்டு, என்னையே இத அனவுன்ஸ் பண்ண வேற சொல்றீங்களா...? வச்சிக்கிறேண்டா... வச்சிக்கிறேன்... யுவன் ஷங்கர் ராஜா புரொடக்‌ஷன்ஸ் தானே... ? இன்னும் 9 டேய்ஸ்லதான ரிலீசு? பியார் பிரேமா காதல்..." என்று அந்த விடியோ முடிகிறது.

ஒய்.எஸ்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பா யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் பியார் பிரேமா காதல். பிக்பாஸ் சீசன் 1 ல் கலக்கிய ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

பியார் பிரேமா காதல் திரைப்படத்தை எலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி படமாக தயாராகியுள்ளது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தோட போட்டிபோட்டுக்கொண்டு பியார் பிரேமா காதல் திரைப்படம் ரிலீஸ் ஆவதால், இந்த "அகில உலக சூப்பர் ஸ்டாரை" வைத்து படத்திற்கு புரொமோஷன் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X