புனித் சார் சந்திக்க வேண்டும் என்றார்.. ஆனால் இப்படி நினைக்கவில்லை... சிவகார்த்திகேயன் கண்ணீர்!

சென்னை: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையிலான நட்பு குறித்து கண்ணீர்மல்க பேசியுள்ளார்.

Recommended Video

என் குழந்தையை இழந்துட்டேன்! Puneeth பற்றி பேசிய Shivarajkumar

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தந்தை ராஜ்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புனித் ராஜ்குமாரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நேரில் ஆறுதல்

சிவகார்த்திகேயன் நேரில் ஆறுதல்

தொடர்ந்து புனித் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரையும் புனித் ராஜ்குமாரின் அண்ணனான நடிகர் சிவராஜ்குமாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புனித் ராஜ்குமாருடன் தனக்கு இருந்த நட்பு குறித்து கண்ணீர்மல்க பேசியுள்ளார்.

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ஒரு மேடையில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி செய்ததைப் பார்த்து புனித் ராஜ்குமார் சார் என்னை பாராட்டினார். அது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு புனித் சாருடன் தொலைபேசியில் பேசினேன், அப்போது உங்களை ரொம்பப் பிடிக்கும் என்றார்.

வீட்டிற்கு அழைத்தால் புனித்

வீட்டிற்கு அழைத்தால் புனித்

பெங்களூருக்கு வரும்போது நிச்சயமாக வீட்டிற்கு வரவேண்டும் என்று கூறினார். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் அவரை பார்க்க வருவேன் என நினைக்கவில்லை. சிவராஜ்குமார் சாருடன் ஒரு பாட்டில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு அவருடன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளேன். அவரைச் சந்திக்கும்போது கூட, "என்னைச் சந்திக்க வேண்டும் என்று புனித் ராஜ்குமார் சார் வரச் சொன்னார்.

என்னால் மீள முடியவில்லை

என்னால் மீள முடியவில்லை

இப்போது வரை அதிர்ச்சியில்தான் இருக்கிறேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அவருடைய பாடல்கள், சண்டைக் காட்சிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. இப்போது தோன்றுவது எல்லாம் திரையில் மட்டும் ஹீரோவாக இருக்கக் கூடாது. நிஜ வாழ்க்கையில் புனித் சார் மாதிரி நிறைய நல்ல விஷயங்களை செய்ய வேண்டும்.

ஹீரோவாக எப்படி இருக்க வேண்டும்

ஹீரோவாக எப்படி இருக்க வேண்டும்

அவர் எப்போதுமே நினைவில் இருப்பார். அவரது மரணம் சினிமாவுக்கான இழப்பு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகத்துக்கே ஏற்பட்ட இழப்பு. எங்களுக்கு எல்லாம் அவர் இன்ஸ்பைரேஷன். ஒரு ஹீரோவாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு புனித் சார்தான் உதாரணம்.

என் அம்மாவை இப்படிதான் பார்த்தேன்

என் அம்மாவை இப்படிதான் பார்த்தேன்

புனித் சாருடைய வீட்டிற்குச் சென்று, அவருடைய மனைவியைச் சந்தித்தேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. இதே போன்றதொரு சூழலில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்தேன். எங்க அப்பா தவறிவிட்டார். அப்போது எங்க அம்மாவை எப்படிப் பார்த்தேனோ, அப்படித்தான் இன்று புனித் சாருடைய மனைவியைப் பார்த்தேன்.

டாக்டர் படம் பார்த்துவிட்டு பேசினார்

டாக்டர் படம் பார்த்துவிட்டு பேசினார்

அவர் கடவுளாக இருந்து, அனைவரையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 'டாக்டர்' படம் பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனிடம் பேசியுள்ளார் புனித் சார். இப்போது புனித் சாருடைய மனைவி கூட 'டாக்டர்' படம் குறித்து சார் சொன்னதைத்தான் சொன்னார்கள். அதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை.

மிஸ் யூ சார்

மிஸ் யூ சார்

அதை நினைத்து சந்தோஷப்படுவதா, என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த 'டாக்டர்' படம் புனித் சாரை அவ்வளவு சிரிக்க வைத்தது என்று சொன்னார்கள். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் அது. மிஸ் யூ சார்". இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X