Soori: வாவ்.. சூப்பர்.. அடி தூள்.. எப்படியிருந்த சூரி இப்படி மாறிட்டாரே!

சென்னை: 'கருடன்' மற்றும் 'மாமன்' ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் பல முன்னணி இயக்குநர்கள் சூரியிடம் கால்ஷூட்டுக்காக காத்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோவாகி இருக்கும் சூரியின் மாஸ் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா காமெடியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் நடிகர் சூரி. அந்த படத்திற்கு பின் அனைவரும் அவரை பரோட்டா சூரி என அழைத்தார்கள். அந்த படத்திற்கு பின், தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையால் தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட சூரி.
அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் விரும்பும் நகைச்சுவை நடிகரானார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதையின் நாயகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். விடுதலை திரைப்படத்தின் 2 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கருடன் மற்றும் மாமன் ஆகிய படங்களின் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து விட்டார் சூரி. காமெடியனாக நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அவற்றை செய்து வருகிறார் சூரி.

Soori photo
Photo Credit:

நடிகர் சூரியின் மாஸ் லுக்: பொதுவாக ஹீரோக்கள் நான் படத்திற்காக கடுமையாக உழைத்து சிக்ஸ் வைப்பார்கள். ஆனால், சீமராஜா படத்தின் இயக்குநர் பொன்ராம்,சூரியிடம் ஒரு காட்சிக்காக சிக்ஸ் பேக் வைக்கச் சொல்லியிருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து அந்த படத்தில் சூரி சிக்ஸ் பேக் வைத்து இருக்கிறார். ஆனால், படத்தில் அந்த சீன் ஒரு காட்சியில் மட்டுமே வந்துள்ளது. இருந்தாலும் மனம் தளராத சூரி தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். தற்போது சூரி, மாஸ் லுக்கில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் சூரி அட்டகாசமாக அனைவரும் பார்த்து வியந்து போகும் அளவிற்கு இருக்கிறார். இந்த போட்டோவை கருடன் படத்தில் சூரியுடன் இணைந்து நடித்த நடிகர் உன்னிமுகுத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

மண்டாடி: தற்போது சூரி, பெரும் பொருட்செலவில் தயாராகி 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கி வரும் இப்படத்தில், சத்யராஜ், மகிமா நம்பியார், அச்யுத் குமார், சுஹாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்து வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்தில் சூரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகர், ஹீரோ என அடுத்தடுத்து தனது வட்டத்தை பெரியதாக்கிக் கொள்ளும் சூரி, தற்போது தயாரிப்பாளராக மாற திட்டமிட்டு இருக்கிறார். படங்களில் சம்பளத்துக்கு பதில், தயாரிப்பாளராக இணைந்து வியாபாரத்தில் பங்கு என்ற முறையில் பணிபுரிய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. நடிகர் சூரியின் இந்த முடிவு உண்மையில் புத்திசாலி தனமான முடிவு என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X