Srikanth: குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ரீகாந்த்.. மகள், மகன் எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க!
சென்னை: இந்தியா முழுவதும் பிரபலங்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
பாலிவுட் நடிகை ஆலியா பட் முதல் கோலிவுட் நடிகை நயன்தாரா வரை தீபாவளி கொண்டாடிய போட்டோக்கள் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ரீகாந்த்: சினிமா பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ரோஜாக் கூட்டம், ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்த படங்களை கொடுத்து எமர்ஜிங் ஹீரோவான ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை அவரது மனைவி வந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு மகன் ஒரு மகள்: நடிகர் ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் படித்துவிட்டு திரும்பிய வந்தனா என்பவரை ரகசியமாக திருமணம் செய்து 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. ஆனால், கடைசியாக வந்தானாவை வெளிப்படையாக மனைவி என அறிவித்து அவருடன் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். 2008ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனாவுக்கு திருமணம் ஆன நிலையில், அவர்களுக்கு அகில் என்கிற மகனும் அஹானா என்கிற மகளும் உள்ளனர்.
போதைப் பொருள் வழக்கு: கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் தற்போது தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இந்த தீபாவளியை கொண்டாடியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் உடன் அவர் நடித்த பிளாக்மெயில் திரைப்படம் வெளியாகி பெரிதாக ஓடவில்லை. ரச்சிதா மகாலட்சுமியுடன் அவர் ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











