»   »  பாஜகவில் சேர்ந்த தல அஜீத்தின் 'ரீல்' அண்ணன்

பாஜகவில் சேர்ந்த தல அஜீத்தின் 'ரீல்' அண்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ் கோபி இன்று பாஜகவில் இணைந்தார்.

கேரள மாநில சட்டசபை தேர்தலின்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். மோடி அரசு சுரேஷ் கோபியை கடந்த ஏப்ரல் மாதம் ராஜ்யசபா எம்.பி.யாக்கியது.

Actor Suresh Gopi joins BJP

1998ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய சுரேஷ் கோபி இன்று முறைப்படி பாஜகவில் சேர்ந்தார். அவர் பாஜக பொதுச் செயலாளர் புபிந்தர் யாதவ் மற்றும் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.

பாஜகவில் சேருமாறு மாநில பாஜக தலைவர் முரளீதரன் அழைப்பு விடுத்த நிலையில் கோபி மத்தியில் ஆளும் கட்சியில் சேர்ந்துள்ளார்.

முன்னதாக அவர் பாஜகவில் சேர்வது பற்றி கூறியதாவது,

நான் விரைவில் பாஜகவில் சேர்வேன். நான் கட்சியில் எப்பொழுது சேர வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய வேண்டும். குடியரசு தினத்திற்கு பிறகு சேர்வேன் என நினைக்கிறேன் என்றார்.

English summary
Popular Malayalam actor cum Rajya Sabha MP Suresh Gopi has joined BJP on wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil