ஹேப்பி பர்த்டே சூர்யா...வாழ்த்து சொல்ல போறீங்களா?...அதற்கு முன் இதை தெரிஞ்சுக்கிட்டு வாழ்த்துங்க

சென்னை : திரையுலக மார்க்கண்டேயன் என தமிழ் சினிமா உலகினரால் போற்றப்படும் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Surya அரசியலுக்கு வரலாமா? | Happy Birthday Surya *VOX

நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான சூர்யா இன்று 40 க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி, பிஸியாக நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாடிவாசல் க்ளிம்ஸ், சூர்யா 42 அறிவிப்பு வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பற்றியும், அவரது திரையுலக பயணம் பற்றியும் பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான சில விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். இவற்றை படித்த பிறகு நிச்சயம் யாராலும் சூர்யாவை வாழ்த்தாமல் இருக்க முடியாது.

 அப்பா பெயரையே சொல்லல

அப்பா பெயரையே சொல்லல

சினிமாவிற்கு வருவதற்கு முன் கார்மெண்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் 8 மாதங்கள் வேலை செய்தார் சூர்யா. அப்போது யாரிடமும் தான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை. பல நாட்களுக்கு பிறகு அந்த நிறுவனத்தன் ஓனருக்கு சூர்யா, சிவக்குமாரின் மகன் என தெரிய வந்துள்ளது.

பெயர் வச்சது இவர் தானா

பெயர் வச்சது இவர் தானா

டைரக்டர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் தான் சூர்யா அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்தை தயாரித்தவர் பிரபல டைரக்டர் மணிரத்னம். இவர் தான் சரவணன் என்ற பெயரை மாற்றி சூர்யா என்ற பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே சரவணன் என்ற பெயரில் நடிகர் இருந்ததால் குழப்பம் வராமல் இருக்க தான் பெயரை மாற்றி உள்ளார்.

நேருக்கு நேர் இவர் நடிக்க வேண்டிய படம்

நேருக்கு நேர் இவர் நடிக்க வேண்டிய படம்

நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த ரோலில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது அஜித் தான். அவர் படத்தில் இருந்து விலகியதால் தான் அவருக்கு பதில் தான் சூர்யா நடித்துள்ளார். லவ் பாய் ரோல்களில் நடித்து தான் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அப்போவே நடிச்சுட்டாரு

அப்போவே நடிச்சுட்டாரு

தற்போது மல்டிஸ்டார் படங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சூர்யா நேருக்கு நேர், பிதாமகன், ஆயுத எழுத்து என ஆரம்ப காலத்திலேயே மல்டி ஸ்டார் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்.

ஒரு படம், பத்தாண்டு வெற்றி

ஒரு படம், பத்தாண்டு வெற்றி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படம் அவரை டாப் ஹீரோ ஆக்கியது. 2000 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 படங்களால் பிளாக்பஸ்டர் ஹீரோவாக வலம் வந்தார் சூர்யா. வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருபவர்.

 கொரோனாவிலும் பிளாக்பஸ்டர் ஹிட்

கொரோனாவிலும் பிளாக்பஸ்டர் ஹிட்

கொரோனா காலத்தில் சினிமா உலகமே முடங்கிய போதும் துணிந்து சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் சூர்யா. சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஆஸ்காருக்கு சூர்யாவின் படங்கள் சென்றன.

சூர்யா பற்றி இது யாருக்காவது தெரியுமா

சூர்யா பற்றி இது யாருக்காவது தெரியுமா

சூர்யா நடிகர், தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் டப்பிங் கலைஞர், பாடகர் என்பது யாருக்காவது தெரியுமா? அட ஆமாங்க. குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு டப்பிங் பேசியது சூர்யா தான். அஞ்சான் படத்தில் சமந்தாவுடன் ஆடும் ஏக் தோ தீன் பாடலை பாடியது நம்ம சூர்யா தான். சினிமாவில் மட்டுமல்ல சன்ரைஸ் விளம்பர பாடலையும் சூர்யா தான் பாடி உள்ளார்.

சூர்யாவின் வாழ்க்கையை மாற்றியவர்

சூர்யாவின் வாழ்க்கையை மாற்றியவர்

சூர்யா சினிமாவிற்கு வந்த புதிதில் குறைவான நம்பிக்கை, குறைவான ஞாபக சக்தி, சண்டை அல்லது டான்ஸ் திறமை போன்றவற்றால் கடுமையாக திண்டாடி உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் சூர்யாவிற்கு வழிகாட்டியவர் நடிகர் ரகுவரன் தான். அவர் தான், உனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள். இல்லாவிட்டால் எப்போதும் நீ நடிகர் சிவக்குமாரின் மகனாக மட்டுமே பார்க்கப்படுவாய் என சூர்யாவிற்கு அட்வைஸ் வழங்கி உள்ளார். அவரது அட்வைசிற்கு பிறகு தனது திறமைகளை வளர்த்துக் கொண்டதுடன் படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

 சூர்யாவிற்கு பிடித்த விஷயங்கள்

சூர்யாவிற்கு பிடித்த விஷயங்கள்

பிடித்த கலர் - பிளாக் அண்ட் ஒயிட்

பிடித்த உணவு - தயிர் சாதம், ஊறுகாய், தோசை

பிடித்த நடிகர் - ரஜினி, கமல்

பிடித்த நடிகை - த்ரிஷா

பிடித்த விஷயம் - நீண்ட தூர பயணம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X