»   »  வாடகைத்தாய் மூலம் திருமணம் ஆகாமலேயே குழந்தை... சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர்

வாடகைத்தாய் மூலம் திருமணம் ஆகாமலேயே குழந்தை... சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமணமாகாமலேயே வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் பிரபல இந்தி நடிகர் துஷார்கபூர்.

நடிகர் ஜிதேந்திராவின் மகன் துஷார்கபூர் (39). இந்திப் படங்களில் நடித்து வரும் இவருக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லையாம். இதனால், வாடகைத்தாய் மூலம் தற்போது அவர் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.

Actor Tusshar Kapoor becomes a single dad via surrogacy

மும்பையிலுள்ள மருத்துவமனை மூலம் இதனை அவர் செயல்படுத்தியுள்ளார். ஒரு வாரமே ஆன தனது குழந்தைக்கு லக்சயா என துஷார் பெயர் வைத்துள்ளார்.

வாடகைத்தாய் மூலம் தந்தையானது குறித்து துஷார் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோரான ஜிதேந்திரா - ஷோபாகபூர் தம்பதி இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் து‌ஷர்கபூர் எடுத்த முடிவுக்கு முழு ஆதரவாக இருந்தோம். எங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம். து‌ஷார்கபூர் ஒரு அற்புதமான மகன். எல்லா வி‌ஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவான். அவன் லக்‌ஷயாவுக்கு சிறந்த தந்தையாக இருப்பான்" என்கின்றனர்.

ஆனால், துஷாரின் இந்த செயல் சட்டத்திற்கு எதிரானது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அதாவது திருமணமாகி, உரிய சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. எனவே, துஷார் அதனை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் செளம்யா சுவாமிநாதன் கூறுகையில், "வாடகைத்தாய் குழந்தை என்பது திருமணமானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகள் நலனுக்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேசமயம், திருமணமாகாதவர்களுக்கு இந்தத் திடடம் கிடையாது எ்ன்று சொல்ல முடியாது. அவர்களும் தாயாக வேண்டும், தந்தையாக வேண்டும் என்று விரும்புவார்கள். அதைத் தடுக்க முடியாது. இதை அடிப்படை உரிமை என்றும் கூறலாம் "என்றார்.

English summary
Actor Tusshar Kapoor announced on Monday the birth of his week-old son, Laksshya, through in-vitro fertilization and surrogacy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil