twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒமிக்ரான்… மோசமான 10 நாட்கள் … கொரோனாவிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால் ட்வீட் !

    |

    சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு விஷால் தற்போது கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ளார்.

    இந்த மகிழ்ச்சியான தகவலை நடிகர் விஷ்ணுவிஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஆக்ஷனில் மிரட்டும் விஷால்... மாஸான வீரமே வாகை சூடும் டிரைலர் ரிலீஸ் ஆக்ஷனில் மிரட்டும் விஷால்... மாஸான வீரமே வாகை சூடும் டிரைலர் ரிலீஸ்

    தீவிரமாகும் கொரோனா

    தீவிரமாகும் கொரோனா

    இந்தியா முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் தொற்று அதிகளவில் பரவில் மூன்றாம் அலை கிட்டத்தட்ட உருவாகியுள்ளது. இதனால் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    பல திரைப்பிரபலங்கள்

    பல திரைப்பிரபலங்கள்

    தமிழகத்தில் பலவித கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் பிடியில் பல சினிமா பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். அருண்விஜய், வடிவேலு, மகேஷ்பாபு, த்ரிஷா, குஷ்பு , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர்.

    10 நாள் மிகவும் மோசமாக இருந்தது

    10 நாள் மிகவும் மோசமாக இருந்தது

    கடந்த ஜனவரி 10ந் தேதி விஷ்ணு விஷால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களில் பரிந்துரைப்படி வீட்டில் தனிமையில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தேன். எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.கடந்த 10 நாட்கள் மிகவும் கடுமையாக இருந்தது.

    உடல் சோர்வாகவே உள்ளது

    உடல் சோர்வாகவே உள்ளது

    இன்னும் உடல் சோர்வாகவே உள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் திரும்புவேன் என்ற நம்பிக்கை மிகுதியாக இருந்தது. உங்களின் அன்புக்கு மிகவும் நன்றி என நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டு இருந்தார்.நடிகர் விஷ்ணு விஷால் தற்போது எஃப். ஐ.ஆர் மற்றும் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    English summary
    Actor Vishnu Vishal recovered from covid 19
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X