»   »  நேர்மை உறங்கலாமா? தமிழருவி மணியன் விலகலாமா? - விவேக்

நேர்மை உறங்கலாமா? தமிழருவி மணியன் விலகலாமா? - விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா?'' என்று தமிழருவி மணியன் அரசியல் விலகல் குறித்து நடிகர் விவேக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

''தம்முடைய வாழ்நாள் இறுதிவரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைக்கப் போவதில்லை'' என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென அறிவித்துள்ளார்.

Actor Vivek Talks about Tamilaruvi Maniyan

அவரின் அறிவிப்பு அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் ''நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா?'' என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''தமிழருவி மணியன் பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாராம்.

நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா? என்று கூறியிருக்கிறார். மேலும் ''ஒரு முறை தமிழருவிமணியன் என் அலுவலகம் வந்தார்.

அவருக்கு ஒரு பேனா பரிசளித்தேன்.வாங்க மறுத்து ''இலவசம் அனைத்தும் லஞ்சமே" என்று கூறினார் என, மணியனின் நேர்மை குறித்த செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Read more about: vivek விவேக்
English summary
Actor Vivek said ''Tamilaruvi Maniyan such a Pure Person''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil