shriya saran: ராட்ச்சச தனமான கவர்ச்சி.. மகளுடன் நீச்சல் குளத்தில் இறங்கிய ஸ்ரேயா சரண்!
சென்னை: நடிகைகள் படவாய்ப்பு வரவேண்டும் என்பதற்காக எதை செய்யுவும் தயாராக இருக்கின்றனர் அந்த வகையில், குழந்தை குட்டி என்று செட்டிலான நடிகை ஸ்ரேயா சரணுக்கு தற்போது பட வாய்ப்பு பெரிதாக இல்லாததால், கணவர், குழந்தையுடன் பொழுதை போக்கி வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளத்தில் டூபீஸ் உடையில் ஆனந்த குளியல் போட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். நடிகர் ஸ்ரேயோ சரண், மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

நடிகை ஸ்ரேயா சரண்: மழை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்திற்கு ஜோடியாக சிவாஜி படத்திலும், திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்தார் ஸ்ரேயா. தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.
திருமணம்: நடிகை ஸ்ரேயா சரண், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை, காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகவைத்துள்ளார். தற்போது, நீச்சல் குளத்தில் தனது கணவர்,குழந்தையுடன் பிகினியில் ஆனந்த குளியல் போட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள், வரவர நீங்கள் கிரணுக்கு போட்டியா வருவீங்க போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











