பாலா படத்திற்காக மீண்டும் வாரணம் ஆயிரம் கேரக்டராக மாறும் சூர்யா

சென்னை : பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படம் 2001 ல் வெளியாகி சூர்யாவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதுவரை சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்த சூர்யாவை, ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய படம் நந்தா தான்.

அதைத் தொடர்ந்து 2003 ல் மீண்டும் பாலா இயக்கிய பிதாமகன் படம், சூர்யாவின் காமெடி முகத்தை உலகிற்கு அடையாளம் காட்டியது. விக்ரம், சூர்யா ஆகியோருக்கு நடிப்பில் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் பிதாமகன்.

மீண்டும் சூர்யா – பாலா

மீண்டும் சூர்யா – பாலா

இந்நிலையில் மீண்டும் சூர்யா, பாலா இணையும் படம் உருவாக உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் பாலா இயக்கும் படத்தை தயாரிக்க போவதாக கூறப்பட்டது.

விலகிய அதர்வா

விலகிய அதர்வா

பல ஆண்டுகளுக்கு பின் சூர்யா - பாலா இணையும் இந்த படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளதாகவும். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. சூர்யா, கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதர்வா ஏற்கனவே நடித்து வரும் படங்களின் தேதியுடன் ஒத்துவராததால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.

இரட்டை வேடத்தில் சூர்யா

இரட்டை வேடத்தில் சூர்யா

அதனால் சூர்யாவையே ஹீரோவாக நடிக்க வைக்க பாலா முடிவு செய்து விட்டாராம். தந்தை - மகன் என இரண்டு ரோல்களிலும் சூர்யாவே நடிக்க போகிறாராம். இதற்கு முன் 2008 ல் கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் தந்தை - மகன் ரோலில் நடித்திருந்தார் சூர்யா.

தந்தை – மகன் கேரக்டர்

தந்தை – மகன் கேரக்டர்

கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தந்தை - மகன் ரோலில் நடிக்க தயாராகி வருகிறாராம் சூர்யா. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X