23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் பயன்படுத்திய திறமை...இதெல்லாம் முன்னாடியே சொல்றது இல்லையா?

சென்னை : கிட்டதட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு பீஸ்ட் படத்தில் விஜய் தனது தனித்திறமையை பயன்படுத்தி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விஜய்க்குள்ள இப்படி ஒரு திறமையா, இதுக்கு தான் அந்த சீனை வைத்தார்களா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசானது பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. 2022ம் ஆண்டில் முதல் பெரிய பட்ஜெட் படமாக, அதுவும் தியடே்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு வலிமை படம் ரிலீசானது.

இப்படி சொதப்பிட்டீங்களே

இப்படி சொதப்பிட்டீங்களே

அஜித்தின் வலிமை படம் முதல் நாளே 35 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது. இதனால் விஜய்யின் பீஸ்ட் படம் நிச்சயம் அதை விட அதிக தொகையை ஓப்பனிங் நாளில் வசூல் செய்து, புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கலவையான விமர்சனங்களையே பீஸ்ட் படம் பெற்றது. நெல்சன் திலீப்குமார் படத்தை சொதப்பி விட்டார் என பலரும் குற்றம்சாட்டினர்.

அன்பவங்களை பகிர்ந்த அன்பறிவு

அன்பவங்களை பகிர்ந்த அன்பறிவு

பீஸ்ட் படத்தில் 60 சதவீதம் ஆக்ஷன், 40 சதவீதம் காமெடி இருக்கும் என படத்தின் ரிலீசுக்கு முன்பே நெல்சன் திலீப்குமார் கூறி இருந்தார். அதே போல் படத்தில் ஆக்ஷன் காட்சிகள், துப்பாக்கி குண்டுகளின் சத்தம் மாஸாக இருந்தது. இந்த படத்திற்கு ஸ்டன்ட் இரட்டையர்களான அன்பறிவு சண்டை காட்சி அமைத்திருந்தனர். இந்த படத்திற்கு ஸ்டன்ட் அமைத்தது பற்றி தங்களின் அனுபவங்களை அன்பறிவு தற்போது பகிர்ந்துள்ளனர்.

எதுக்குப்பா இந்த சீன்

எதுக்குப்பா இந்த சீன்

பீஸ்ட் படத்தில் மாலில் தீவிரவாதிகளுடன் விஜய் சண்டை போடும் போது திடீரென ஸ்கேடிங் மாட்டிக் கொண்டு வருவார். எதற்காக இந்த சீனை வைத்தார்கள். சீரியசாக சண்டை நடந்து கொண்டிருக்கையில் இவர் எதற்காக ஸ்கேட்டிங் மாட்டிக் கொண்டு வருகிறார் என பலரும் கேள்வி கேட்டனர். அதிலும் டிரைலரில், முதல் ஷாட்டில் ஸ்கேடிங் உடன் இருக்கும் விஜய், அடுத்த ஷாட்டில் சாதாரண ஷுவில் இருந்ததால் எடிட்டிங் சரியில்லை என்று வேறு சொன்னார்கள். தற்போது இந்த ஸ்கேட்டிங் சீன் எதற்கு என்பதை அன்பறிவு விளக்கி உள்ளனர்.

டூப் வேணாம்...நானே பண்றேன்

டூப் வேணாம்...நானே பண்றேன்

அவர்கள் கூறுகையில், படத்தில் ஸ்கேடிங் சண்டை ஒன்று இருப்பதாக விஜய்யிடம் கூறினோம். பண்ண முடியுமா இல்லை டூப் போட்டு பண்ணிடலாமா என அவரிடம் கேட்டோம். ஆனால் அவர் ஒரு மணி நேரம் டைம் கொடுங்க என சொல்லி விட்டு போனவர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து நானே பண்ணுறேன். டூப் எதுவும் வேண்டாம் என்றார். நாங்க கூட சொன்னோம், சார் ரிஸ்க் வேண்டாம். இவ்வளவு பேரு இருக்காங்க. தடுமாறி கீழே விழுந்தால் அசிங்கமாகி விடும் என்றோம்.

ஒருமுறை கூட விஜய் தடுமாறல

ஒருமுறை கூட விஜய் தடுமாறல

ஆனால் விஜய் சாரோ, கீழே விழுந்தால் இப்போ என்ன. ஸ்கேடிங் ஷு போட்டால் எல்லோரும் தடுமாறி கீழே விழத்தான் செய்வார்கள். பார்த்துக் கொள்ளலாம் என டூபே போடாமல் அவரே செய்தார். ஏதாவது ஒரு இடத்தில் தடுமாறி விடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் ஒரு இடத்தில் கூட தடுமாறாமல் சூப்பராக அந்த சீனை செய்து முடித்தார். அது தான் பெரிய ஆச்சரியம். இது மட்டுமல்ல படம் முழுவதிலும் பெரும்பாலான சண்டை காட்சிகளில் விஜய் டூப் போடாமல் தான் நடித்தார் என்றனர்.

Recommended Video

பீஸ்ட் சக்சஸ் பார்ட்டி... படக்குழுவுக்கு விஜய் வைத்த ட்ரீட்... நெகிழ்ந்த நெல்சன்!
இதெல்லாம் முன்னாடியே சொல்றது இல்லையா

இதெல்லாம் முன்னாடியே சொல்றது இல்லையா

மின்சார கண்ணா படத்தில் ஊதாப்பூ பாடலில் விஜய் ஸ்கேடிங் ஷு அணிந்து நடித்திருப்பார். அதற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படத்தில் தான் ஸ்கேடிங் ஷு அணிந்து நடித்துள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் படத்தின் ரிலீசுக்கு முன்னாலயே சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக படம் ஓடி இருக்க வாய்ப்பு இருக்கு. இதெல்லாம் முன்னாடியே சொல்லக் கூடாது இன்னும் கூட படத்தை நல்லா பார்த்திருப்போமே என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X