நீண்ட நாட்களுக்கு பின் ட்விட்டருக்கு வந்த பிரபுதேவா...காரணம் இது தான்

சென்னை : 1980 கள் முதல் தற்போது வரை பல படங்களில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பணியாற்றி வருகிறார் நடிகர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மவுனராகம் படத்தில், பனிவிழும் இரவு பாடலில் நடன இயக்குனராக பணியாற்றினார்.

காதலன், லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, விஐபி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், காதலா காதலா, வானத்தை போல ஆகிய படங்களில் இரண்டாவது ஹீரோவாகவும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2019 ல் தேவி 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக இருந்த பிரபு தேவா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

பிரபுதேவா நடிக்கும் பிடி 54

பிரபுதேவா நடிக்கும் பிடி 54

தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், ஊமை விழிகள், பகீரா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அப்படி பிரபுதேவா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் பிடி 54. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் வரலட்சுமி, ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

இவர் தான் டைரக்டரா

இவர் தான் டைரக்டரா

டைரக்டர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இதற்கு முன் ஹரஹர மகாதேவகி, இரட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கியவர். இவற்றில் பெரும்பாலான படங்கள் அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் தான். தற்போது இவர் இயக்கும் பிடி 54 குடும்ப, பொழுதுபோக்கு படமாம். இது பிரபுதேவா இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட ரோலாக அவருக்கு இருக்கும் என சமீபத்தில் சந்தோஷ் கூறி இருந்தார். இதற்கு முன் இயக்கிய படங்களின் கதைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட கதையாம்.

திடீரென ட்விட்டர் விசிட்

திடீரென ட்விட்டர் விசிட்

தனது படங்கள் பற்றி ட்விட்டரில் அடிக்கடி அப்டேட் வெளியிட்டு வரும் பிரபுதேவா நீண்ட காலமாக ட்விட்டர் பக்கமே வரவில்லை. படங்களில் பிஸியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் அவர் தலைகாட்டாமல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று, நீண்ட காலத்திற்கு பிறகு ட்வீட் செய்கிறேன் என ஒரு பதிவை வெளியிட்டார் பிரபுதேவா. இதற்கு ரசிகர்கள் பலர், எங்கே போனீர்கள் இவ்வளவு காலம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அட இது தான் காரணமா

அட இது தான் காரணமா

திடீரென பிரபுதேவா ட்வீட் செய்திருப்பதற்கு காரணம் என்ன என்று விசாரித்தால், சந்தோஷ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் பிடி 54 படத்தின் ஃபஸ்ட்லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாம். இதனை குறிக்கும் விதமாக PD 54, PrabhuDeva54, FirstLook போன்ற ஹேஷ்டாக்குகளை ட்வீட் செய்துள்ளார் சந்தோஷ்.
பிரபு தேவாவின் 54 வது படமான பிடி 54 படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். ஜகனும் இந்த படத்தில் நடிக்கிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X