»   »  நம்பினால் நம்புங்கள்... ஒரே படத்தில் தனுஷ்-சிம்பு!

நம்பினால் நம்புங்கள்... ஒரே படத்தில் தனுஷ்-சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் எஸ்.தமனின் முயற்சியால் தெலுங்குப் படமான திக்காவில், தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் தனித்தனியே ஒரு பாடல் பாடியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நாயகர்களை முன்னிறுத்தி ரசிகர்கள் கொண்டாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. நிஜத்தில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், சினிமாவிற்காக அவர்களை இரண்டு துருவங்களாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.

அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக தனுஷும், சிம்புவும் கருதப்படுகின்றனர். நேரில் சந்தித்துக் கொள்ளும்போது இருவரும் நண்பேண்டா எனச் சொல்லிக் கொண்டாலும், இருவருக்கிமிடையேயான பிரச்சினைகள் இலை மறை காயாகத் தான் உள்ளன.

கவுதம் மேனன்...

கவுதம் மேனன்...

இந்நிலையில், இந்த இருவரையும் ஒரே நேரத்தில் தனித்தனிப் படங்களில் இயக்குகிறார் என்ற பெருமைக்கு உரியவரானார் கவுதம் மேனன். ஆனால், அப்போது அவர் சந்தித்ததாகக் கூறிய பிரச்சினைகள் வேறு கதை.

தமன்...

இந்நிலையில் தற்போது மீண்டும் இவர்களைத் தெலுங்குப் படம் ஒன்றிற்காக ஒன்று சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தமன். பிரபல தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் நடித்து வரும் 'திக்கா' என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்து வருகிறார் இவர்.

பாடல்கள்...

இந்தப் படத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் ஒரு பாடலை பாடித் தந்தார். இந்நிலையில் தற்போது இதே படத்தில் சிம்புவும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ரசிகர்கள் விருப்பம்...

ரசிகர்கள் விருப்பம்...

இதுபோல், தமிழ் படத்தில் இதுவரை சிம்பு, தனுஷ் இணைந்து நடிக்கவோ அல்லது பாடியதோ இல்லை. எனவே, விரைவில் இருவரும் இணைந்து தமிழிலும் பணி புரிந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம் ஆகும்.

English summary
Sai Dharam Tej's next project after the hit film 'Supreme', is a movie titled as 'Thikka'. Music composer SS Thaman is the music director of this film and he is leaving no stone unturned to make the album as awesome as possible.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil