ஜெயம் ரவியை தொடர்ந்து பொன்னியின் செல்வனை நிறைவு செய்த விக்ரம்

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் தற்போது மத்திய பிரதேச மாநிலம் Orchcha பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரம்மாண்ட அரண்மனையில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் வேலைகள் 75 சதவீதம் முடிந்து விட்டதாகவும், விரைவில் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டு, படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்திலும், இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டின் இறுதியிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

முதலில் ஜெயம் ரவி

முதலில் ஜெயம் ரவி

நான்கு நாட்களுக்கு முன் பொன்னியின் இரண்டு பாகங்களிலும் தனது போஷனை முடித்து விட்டதாகவும், மிக கனத்த இதயத்துடன் பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கில் இருந்து விலகுவதாகவும் ஜெயம் ரவி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். லீட் ரோலான பொன்னியின் செல்வன் ரோலில் நடிக்கும் ஜெயம் ரவியின் போஷனை அதற்குள் எடுத்து முடித்து விட்டார்களா என பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.

வந்தியதேவனாக கார்த்தி

வந்தியதேவனாக கார்த்தி

ஆனால் இதற்கு பதில் ட்வீட் செய்த கார்த்தி, அப்படி எல்லா செல்ல விட மாட்டோம் இளவரசே என குறிப்பிட்டவர், இன்னும் 6 நாட்களில் மத்திய பிரதேசத்தில் ஷுட்டிங்கை முடித்து விட்டு, தமிழகம் திரும்ப உள்ளதாகவும், தான் வந்தியத் தேவன் ரோலில் தான் நடிக்கிறேன் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

விக்ரமும் முடிச்சுட்டார்

விக்ரமும் முடிச்சுட்டார்

இந்நிலையில் பொன்னியின் செல்வனில் தனது போஷனை முடித்து விட்டதாக நடிகர் விக்ரமும் இன்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் ரோலில் தான் நடிக்கிறார் என்பதை விக்ரமின் மேனேஜர் யுவராஜ் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஆதித்ய கரிகாலன்

ஆதித்ய கரிகாலன்

ட்விட்டரில் யுவராஜ் தனது பதிவில், ஆதித்ய கரிகாலனின் ஷுட்டிங் முடிந்தது. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் தனது போஷனை முடித்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

மெகா பட்ஜெட் படம்

மெகா பட்ஜெட் படம்

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப் பெரிய பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம்.

எதிர்பார்ப்பை கூட்டும் அப்டேட்

எதிர்பார்ப்பை கூட்டும் அப்டேட்

கிட்டதட்ட 500 கோடிக்கும் அதிகமான செலவில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏராளமான இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகி வரும் பொன்னியின் செல்வன் படம் பற்றிய தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

எத்தனை அப்டேட்

எத்தனை அப்டேட்

பாடல்கள் பட்டியல், எந்த நடிகர் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்ற பட்டியல், பொன்னியின் செல்வன் செட் ஃபோட்டோ, ஐஸ்வர்யா ராயின் ஷுட்டிங் ஸ்பாட் லுக் ஃபோட்டோ என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X