அடிதூள்...துருவ் விக்ரமை அடுத்து இயக்க போவது இவர் தானா ?
சென்னை : முதல் படமான ஆதித்ய வர்மா படத்திலேயே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் பெரிய அளவில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் துருவ்.
ரசிகர்களிடம் பாராட்டை பெற்றாலும் விமர்சன ரீதியாக பல எதிர்ப்புக்களை இந்த படம் சந்தித்தது. குறிப்பாக துருவ் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றது உள்ளிட்ட பல விஷயங்கள் எதிர்ப்பை சம்பாதித்தன.

விரைவில் மகான் ரிலீஸ்
தற்போது தனது தந்தை விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக மகான் படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. மகான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மாரிசெல்வராஜ் படம்
இந்நிலையில் மகான் படத்தை தொடர்ந்து அடுத்த முக்கியமான படம் ஒன்றில் நடிக்க துருவ் ஒப்பந்தமாகி உள்ளார். மகான் படத்தை தொடர்ந்து டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாகக் கொண்ட படம் ஒன்றில் விக்ரம் நடிக்க போவதாக கூறப்பட்டது.

தள்ளிப்போகிறதா படம்
ஆனால் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கும் புதிய படத்தில் மாரி செல்வராஜ் பிஸியாக இருப்பதால் துருவ் நடிக்கும் படம் தள்ளி போகிறதாம். 2022 ம் ஆண்டின் பாதியிலேயே துருவ் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் வேலைகள் துவக்கப்பட உள்ளதாம்.

இவர் தான் இயக்க போகிறாரா
அதே சமயம் மற்றொரு டாப் டைரக்டர்களின் படத்தில் நடிக்க துருவிடம் பேசப்பட்டு வருகிறதாம். அவர் வேறு யாருமில்லை, டைரக்டர் விக்னேஷ் சிவன் தானாம். துடிப்பான ரொமான்டிக் படம் ஒன்றில் டைரக்டர் விக்னேஷ் சிவன் மற்றும் துருவ் இணைய போகிறார்களாம்.
Recommended Video

எப்போ ஷுட்டிங்
விக்னேஷ் சிவன் தற்போது தான் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை கிறிஸ்துமஸ் சமயத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் தனது புதிய படத்தின் வேலைகளை விக்கி துவக்க போகிறாராம்.


Click it and Unblock the Notifications











