»   »  இனி கமல் நினைப்பதை எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்: எப்படி தெரியுமா?

இனி கமல் நினைப்பதை எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்: எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரை அடுத்து பிளாக்(Blog) எழுதப் போவதாக உலக நாயகன் கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கி ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

After tweeting, Kamal Haasan writes blog

தொழில்நுட்பத்தின் உதவியால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இடையே இருந்த இடைவெளி குறைந்துவிட்டது. உலக நாயகன் செவாலியே கமல் ஹாஸன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ட்விட்டரில் சேர்ந்தார்.

அவர் தனது படங்கள் பற்றியும், குடும்பம், உடல்நலம் பற்றியும் அவ்வப்போது ட்வீட் போட்டு வருகிறார். சக கலைஞர்களை ட்விட்டரில் வாழ்த்தியும்,\ பாராட்டியும் வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிளாக் எழுதுகிறேன். வசனத்தை எதிர்பார்த்து அல்ல எனது கருத்துகளை தெரிவிக்க என்று கூறியுள்ளார்.

English summary
Chevalier Kamal Haasan tweeted that, 'ikamalhaasan Writing a blog. A blog to begin with in say 1 mt or so.Not seeking dialogue just a mirror on my idea wall.Narscism? Who cares.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil