»   »  ஐஸ்வர்யா ராய் பற்றி நான் 'அப்படி' பேசியிருக்கக் கூடாது: ரன்பிர்

ஐஸ்வர்யா ராய் பற்றி நான் 'அப்படி' பேசியிருக்கக் கூடாது: ரன்பிர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராயை அவமதிக்கும் விதமாக தான் பேசியிருக்கக் கூடாது என்று பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் தன்னை விட மூத்தவரான ஐஸ்வர்யா ராயுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார் ரன்பிர் கபூர். ஐஸ்வர்யா, ரன்பிர் நெருக்கமாக நடித்தது பச்சன்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்நிலையில் ரன்பிர் கபூர் வேறு ஒரு பேட்டி அளித்தார்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

ஐஸ்வர்யா ராயின் கன்னத்தை தொடவே பயந்து நடுங்கினேன். அவர் ஊக்கமளித்து நடிக்க வைத்தார். ஐஸ்வர்யா ராயுடன் நெருங்கி நடிக்க இது தான் சான்ஸ் என்று நடித்தேன என ரன்பிர் தெரிவித்தார்.

கோபம்

கோபம்

ஏற்கனவே ஐஸ்வர்யா ராயால் கோபத்தில் இருந்த பச்சன்களுக்கு ரன்பிர் அளித்த பேட்டியை கேட்டுவிட்டு மேலும் கோபம் வந்துவிட்டது. பச்சன்கள் தன் மீது கொலவெறியில் இருப்பது பற்றி ரன்பிருக்கு தெரிய வந்தது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நான் ஐஸ்வர்யா ராய் பற்றி கூறியது தப்பாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் சாதாரணமாக தெரிவித்த ஒரு விஷயம் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது என ரன்பிர் தெரிவித்துள்ளார்.

அவமதிப்பு

அவமதிப்பு

ஐஸ்வர்யா ராய் அருமையான நடிகை, எங்கள் குடும்ப நண்பர். இந்தியாவின் திறமையான, மதிப்புமிக்க பெண்களில் ஒருவர் ஐஸ்வர்யா. ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் அவரின் பங்களிப்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். அவரை நான் அவமதித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ரன்பிர்.

English summary
Bollywood actor Ranbir Kapoor said that he could not have disrespected Aishwarya Rai Bachchan like that.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos