ஹீரோ .. ஹீரோ ..

By Staff

அடுத்த 5 மாதங்களுக்கு படப்பிடிப்புகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு கார் ரேஸ்களுக்காக தீவிரப் பயிற்சியில்ஈடுபட நடிகர் அஜீத் முடிவு செய்துள்ளார்.

நடிக்க வரும் முன் பைக் ரேஸ்களில் பங்கேற்று வந்தவர் அஜீத். நடிக்க வந்த பின்னர் கார் ரேஸ் பயிற்சியில்ஈடுபட்டார். சமீபகாலமாக விமானம் ஓட்டும் பயிற்சியும் எடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் பல கார்பந்தயங்களில் பங்கேற்ற அவர் தொடர் தோல்வியைத் தழுவினார். ஒரு ரேசில் பெரும் விபத்தில் இருந்துதப்பினார்.

இந் நிலையில் நடிப்பை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு கார் ரேசில் அதிக கவனம் செலுத்த அஜீத் முடிவுசெய்துள்ளார்.

அவர் கூறுகையில்,

சினிமாவில் நடிக்க வரும் முன்பே மோட்டார் பைக் ரேஸ்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால், அப்போது நிதிப்பற்றாக்குறை காரணமாக கார் ரேஸ் பயிற்சி எடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் நடிக்க வந்து பணம் சேர்த்தபிறகு தான் கார் ரேஸ் பயிற்சியிலேயே இறங்கினேன்.

இனிமேல் அதிக அளவில் ரேஸ்களில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன். பி.எம்.டபிள்யூ. ரக கார் ரேஸ்களில்அதிக அளவில் கலந்து கொள்வேன். இதற்காக அடுத்த ஐந்து மாதங்களுக்கு எனது படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்.

முதல் போட்டி மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில்பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் வழங்கும் பயிற்சியில் ஈடுபட உள்ளேன்.

இந்தியாவின் சார்பில் வர்தன் என்ற கார் ரேஸ் வீரரும் நானும் பங்கேற்கவுள்ளோம். இப்போட்டியில் தைவான்,கொரியா, மலேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார் அஜித்.

பேட்டியின்போது அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும் உடன் இருந்தார். தன் கணவர் ரேஸ்களில்அதிக ஆர்வம் காட்டுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பி.எம்.டபிள்யூ வழங்கும் பயிற்சியில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு தலா 35,000 யூரோ டாலர்கள்வழஙகப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.இதனால் அஜீத் முதல் 5 இடத்தில் ஓரிடத்தைப் பிடித்தாலும் பணம் கிடைக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X