twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |
    நடிகர் அஜீத் திருவண்ணாமலையில் நள்ளிரவில் கிரிவலம் வந்தார்.

    விஜய் பாணியில் ரசிகர் மன்றங்களை டெவலப் செய்ய முடிவெடுத்த அஜீத் முதல் கட்டமாக சென்னையில் ரசிகர் மன்ற தலைமைஅலுவலக்தைத் திறந்தார். இதுவரை ரசிகர்களை பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் இருந்த அஜீத் தற்போது ரசிகர்களைஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

    இதன் அடுத்த கட்டமாக விஜயகாந்த் பாணியில் ஊர் ஊராக ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.முதல் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.

    இந்தக் கூட்டத்துக்கு முன் கிரிவலம் செய்ய முடிவெடுத்தார் அஜீத். ஆனால் அவர் சென்ற இடமெல்லாம் ரசிகர்கள்முற்றுகையிட்டவே, கிரிவலத்தை நள்ளிரவுக்கு ஒத்தி வைத்தார். பின்னர் இரவு 1 மணியளவில் தனியார் பாதுகாப்புப் படையினர்புடை சூழ அவர் கிரிவலம் வந்தார்.

    கிரிவலம் முடிந்து அதிகாலை 5 மணியளவில் அண்ணாமலையார் கோவிலில் சாமி கும்பிட்ட அஜீத்துக்கு கோவில் நிர்வாகம்சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டது.

    பின்னர் வெளியே வந்த அஜீத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது தொடர்பாகஎழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக நான் கூற எதுவும் இல்லை. இதுகுறித்துக் கேட்டால் நோ கமெண்ட்ஸ்தான் எனது பதில்.

    நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது திரைத் துறைக்கே பெருமையான விஷயம் என்றார்.

    அஜீத்தைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அவருக்குப் பாதுகாப்பாக வந்தவர்கள் ரசிகர்களைப் பிடித்துத் தள்ளினர். இதில் 4பேர் கீழே விழுந்து லேசான சிராப்புக் காயங்டைந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X