»   »  அஜீத்துக்கு டைபாய்டு

அஜீத்துக்கு டைபாய்டு

Subscribe to Oneindia Tamil

பில்லா பட ஷூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பியுள்ள நடிகர் அஜீத்துக்கு டைபாய்டு காய்ச்சல் வந்திருப்பதால், அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

பாலாஜியின் தயாரிப்பில் அஜீத், நயனதாரா, நமீதா உள்ளிட்டோர் நடிக்கும் படம் பில்லா. ரஜினிகாந்த்தின் பில்லா படத்தின் ரீமேக்கான இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மலேசியாவில் நடந்து வந்தது.

இரவு பகலாக ஷூட்டிங்கில் அஜீத் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து அவர் சென்னைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் ஊர் திரும்பியவுடன் அவருக்கு மஞ்சள் காமாலையும், டைபாய்டும் வந்து விட்டது.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Please Wait while comments are loading...