»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பாலா இயக்கத்தில் அஜீத் நடிக்க மிக பிரமாண்டமான படத்தை எடுக்கிறார் ஏ.எம். ரத்னம்.

பிதாமகனைத் தொடர்ந்து அடுத்த படத்தை தானே தயாரித்து இயக்க இருந்தார் டைரக்டர் பாலா.ஹீரோவாக சூர்யாவையே புக் செய்தார். ஆனால், அதில் ஒரு மாற்றம். அந்தப் படத்தை இயக்கப்போவது பாலா அல்ல, ராம் சத்யா.

ராம் சத்யாவிடம் பொறுப்பைத் தந்துவிட்டு கமலுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணும் மூடில் இருந்தார்பாலா. ஆனால், அது கொஞ்சம் தள்ளிப் போவதால், அஜீத்தை வைத்து ஒரு படத்தை எடுக்க முடிவுசெய்திருக்கிறார்.

ஒரு காலத்தில் பிரேக்குக்காக ஏங்கிக் கொண்டிருந்த சூர்யா தனது தந்தையின் விசிறியானபாலாவிடம் மனம் திறந்து பேசியதையடுத்துத் தான் நந்தா கதை உருவானது. அதே போலஅஜீத்தும் பாலாவை சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

அப்போது தான் அவருக்காக நெடு நாட்களுக்கு முன்பே தான் உருவாக்கியிருந்த கதையைசொல்லியிருக்கிறார் பாலா.

உடனே அஜீத் ஒப்புக் கொள்ள, இரு அருமையான கலைஞர்கள்சேருவதை அறிந்த ஏ.எம். ரத்னம், உடனடியாக தானே படத்தைத் தயாரிக்க முன் வந்துவிட்டாராம்.

விரைவில் சூட்டிங்குக்குக் கிளம்புகிறார்கள்.

பாலாவின் படத்துக்கு முன் அஜீத் பெரிய அளவில் நம்பியிருக்கும் படம் அட்டகாசம்.அமர்க்களம் என்ற அட்டகாச படம் தந்த சரண் தான் இதை இயக்கி வருகிறார்.

இதில் டிரைவிங்ஸ்கூல் நடத்தும் இளைஞராகவும், ஹார்பர் பகுதியை கலக்கும் அடிதடி தாதாவாகவும் இருவேடங்களாம் அஜீத்துக்கு.

இதற்கிடையே அவர் நடித்து பிளாப் ஆன ஜனா படத்தை தெலுங்கில் டப் செய்துகொண்டிருக்கிறார்கள். ஸ்னேகாவுக்கு தெலுங்கில் உள்ள மார்க்கெட்டை வைத்து இந்த முயற்சியில்இறங்கியிருக்கிறார்கள்.

அட்டகாசத்துக்கு முன்பே அஜீத் கமிட் ஆன படம் ஜி. ஆனால், அது ரிலீஸ் ஆகிற மாதிரியேதெரியலையே என்று விசாரித்தபோது புதிய விவரம் கிடைத்தது.

இந்தப் படத்தில் அஜீத் மாணவர்தலைவராக இருந்து அரசியலுக்கு வருகிறாராம்.

இவர்கள் எடுத்து முடித்த வரை ரஷ் போட்டுப் பார்த்தபோது, ஆய்த எழுத்து படத்தின் சாயல்அப்படியே இருக்க, அதிர்ந்து போய் கதையை மாத்தி, படத்தை ஆங்காங்கே ரீ-சூட் செய்துகொண்டிருக்கிறார்களாம்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil