»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தில், தூள், கில்லி என தொடர்ச்சியாக ஹிட் படங்ளைத் தந்த தரணி இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ஆவதற்காக கார் ரேஸை மூட்டை கட்டி வைத்திருக்கும் அஜீத் இனி சின்ன டைரக்டர்களின்படங்களில் எல்லாம் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்.

தனக்கு இரண்டு ஹிட் படங்களை இயக்கித் தந்த சரண் இயக்கத்தில் அட்டகாசம் படத்திலும், தொடர்ச்சியாகஇரண்டு ஹிட் படங்களைத் தந்த இயக்குநர் லிங்குசாமியின் ஜி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்து விட்டு, தான் இயக்குநராக அறிமுகப்படுத்திய ரமணாவின் இயக்கத்தில்மிரட்டல் படத்தில் அஜீத் நடிக்கிறார்.

அதை முடித்துவிட்டு தரணியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண முடிவு செய்துள்ளாராம்.

தரணி இப்போது கோலிவுட்டின் ஹாட்கேக் டைக்டர். அதிலும் அவரது கில்லி படத்தின் வசூல் படையப்பாவைவிஞ்சியதால், தயாரிப்பாளர்கள் தேடும் இயக்குநராகியிருக்கிறார். பரபரப்பாக காட்சிகளை நகர்த்தும் இவரதுஸ்டைலைப் பார்த்து அசந்து போன அஜீத் தனக்கு ஒரு படம் இயக்கித் தரும்படி கேட்டிருக்கிறார். தரணியும் ஓகேசொல்லிவிட்டார்.

கைவசம் வைத்திருக்கும் படங்களை முடித்து விட்டு, தரணிக்கு மொத்தமாக கால்ஷீட் தரப் போகிறார் அஜீத். அதற்குமுன்பு தரணி தெலுங்கில் ஒரு படம் பண்ணப் போகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப்படத்திற்கு பங்காரு என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

படத்தில் கதாநாயகனாக சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க நம்ம ஊர்த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. தரணியின் முந்தைய படங்களைப் போலவே இதுவும் முழுக்க முழுக்கஆக்ஷன் படம்தானாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil