»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil
ஜி படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கருத்துக்கள் எனது கருத்துக்களல்ல, அது இயக்குனர் கதைக்காத சேர்த்த வசனங்கள் தான் என்கிறார்அஜீத்.

அஜீத் நடித்து சமீபத்தில் வெளியான ஜி படம் முழுக்க ஒரே அரசியல் வாடை. வேட்டி, சட்டையை போட்டுக் கொண்டு அரசியல் பக்கம்வந்துவிடுவாரோ என்ற படத்தில் அளவுக்கு அதிகமாக ரொம்ப தூக்கலாக இருக்கிறது அரசியல்.

அதே நேரத்தில் படத்தின் ஓப்பனிங் மிக நன்றாக இருப்பதாக தமிழகம் முழுவதும் இருந்தும் வினியோகஸ்தர்கள் அஜீத்தின் வயிற்றில்பாலை வார்த்துள்ளனர். வசூலில் குறை வைக்கவில்லை, கூட்டம் அலைமோதுவதைப் பார்த்தால் ஈசியாக 50 நாட்களைத் தாண்டும்என்கின்றன கணிப்புகள்.

இந் நிலையில் மிக மகிழ்ச்சியாக நிருபர்களை சந்தித்தார் அஜீத்.

அவர் பேசியதிலிருந்து,

ஜி படம் நன்றாக ஓடுகிறது, பேசப்படுகிறது. இது மிகுந்த சந்தோஷம் தருகிறது. இதில் நான் அரசியல் பேசியாத சொல்கிறார்கள். நானாபேசினேன். படத்தில் வரும் அரசியல் தொடர்பான வசனங்கள் எனது சொந்த கருத்தல்ல.

படத்தின் இயக்குனரின் கருத்து. படத்தின் வில்லன் ஒரு அரசியல்வாதி. ஆக, கதைக்காக வசனங்களை வைத்து தானே ஆக வேண்டும். இதைவைத்துக் கொண்டு, எனக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

படத்தில் நான் நடித்திருக்கிறேன். அவ்வளவு தான். என் தொழில் சினிமா, எனது ரசிகர்களை அரசியலுக்கு கொண்டு போக நான்நினைக்கவில்லை. சேவை மனப்பான்மைக்கு அவர்களை இட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சுற்றுச்சூழல், மரம் நடுதல் என ஆரோக்கியமான பாதையில் அவர்களை கொண்டு சென்று கொண்டிருக்கிறேன். இதற்கும் அரசியல் சாயம்பூசுகிறார்கள். என்ன செய்ய?

எனக்கு 38,000 ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவற்றின் மூலம் வருடத்துக்கு 38,000 மரங்களை வளர்த்தாலே போதும், எனது குறிக்கோள்நிறைவேறி விடும்.

ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான். முதலில் குடும்பம், அதன் பிறகுதான் மன்றம். என்னுடன் தனிப்பட்ட முறயில் புகைப்படம்எடுத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு ரசிகரும், ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழித்துக் கொண்டு சென்னை வருகிறாரக்ள். அதை நான்விரும்பவில்லை. இது தேவையா?

அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு இப்படி வீணாகக் கூடாது. எனவேதான் நானே மாவட்டம்தோறும் சென்று அவர்களது ஆசையைநிறைவேற்ற ஆரம்பித்துள்ளேன்.

இதுவரை 4 மாவட்டங்களுக்கு சென்று விட்டேன்.

நானே திருமண மண்டபத்தைப் பிடித்து, அதற்குரிய வாடகையைக் கொடுத்து காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ரசிகர்களைசந்திக்கிறேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். அப்போதும் மரம் வளர்ர்ப்பது பத்தி தான் பேசுகிறேன். இதில்உள்நோக்கம், சைடு நோக்கம் எல்லாம் இல்லை.

நான் எதைச் செய்தாலும் சிலர் அதற்கு உள்நோக்கம் கற்பிக்க முயல்கிறார்கள். அதேசமயம் சிலர் நான் எதைச் செய்தாலும் ஆதரிக்கிறார்கள்.ரெண்டுமே தப்பு என்று சொல்லி அட்டகாசமாய் சிரித்தார் அஜீத்.

மேலும் படத்தில் சிகரெட் குடிப்பது மாதிரி நடிக்க ரொம்ப வருத்தமா இருக்கு என்கிறார் அஜீத். ரசிகர்களும் அதையே பாலோபண்ணுவாங்களோனு தோணுது. முடிஞ்சவரை அந்த மாதிரி சீன்களை தவிர்க்கப் போறேன் என்றார்.

நைஸ் மேன்.

இப்போதெல்லாம் படத்தில் நடிப்பதோடு சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜீத். கதை கேட்பது,பாடல்களுக்கான டியூன் செலக்ஷன், உடைகள் தேர்வு, சக நடிகர்கள் தேர்வு என அனைத்திலும் இயக்குனர்களுடன் உட்கார்ந்து பேசிமுடிவுக்கு வருகிறார் என்கிறார்கள்.

அப்படி அஜீத் சிரத்தை எடுத்து செய்த படங்களில் ஒன்று தான் ஜி. அதன் ரிசல்ட் நன்றாகவே வந்திருப்பதால் அஜீத்துக்கு ஏக சந்தோஷம்.

அடுத்து கே.எஸ்.ரவிக்குமாரின் காட்பாதரில் பிஸியாகிவிட்ட அஜீத், ஆசினுடன் குஜாலாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை அஜீத்தின் ஆஸ்தான புரொட்யூசரான நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தான் தயாரிக்கிறார். இவர் அஜீத்தின் பினாமி என்றுகோடம்பாக்கத்தில் சின்ன குழந்தையும் சொல்வது உங்களுக்கும் தெரிந்திருக்குமே.

இந்தப் படத்துக்கு அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் அஜீத்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil