twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    எனக்கு கட்-அவுட் வைப்பதோ, அதற்கு பாலாபிஷேகம் செய்வதோ கூடாது என்று நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

    கடந்த வாரம் தனது ரசிகர் மன்றத்தின் தலைமை அலுவலகத்தை சென்னை சாலிகிராமத்தில் தொடங்கி வைத்த அஜீத் இப்போது ரசிகர்மன்றப் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளார்.

    தமிழக அரசின் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் திட்டத்தை தனது ரசிகர்கள் முதல் கட்டமாகமேற்கொள்வார்கள் என்று அஜீத் அறிவித்துள்ளார். தன் அலுவலக வளாகத்தில் இருந்த குப்பைகளை தரம் பிரித்து தனித் தனி கூடைகளில்போட்டு இப் பணியை அவரே தொடங்கி வைத்தார்.

    பின்னர் ரசிகர்கள் மத்தியில் அஜீத் பேசுகையில்,

    பூமியின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந் நிலை நீடித்தால் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை நாம்அல்லது நமது சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதுகுறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த விஞ்ஞானிகளுக்கு வேலை வெட்டி கிடையாது என்று நாம் இதை அலட்சியப்படுத்த முடியாது. இந்த நிலைக்குக் காரணம் பக்கத்துநாடோ பக்கத்து வீட்டுக்காரர்களோ அல்ல. நாம்தான்.

    19ம் நூற்றாண்டில் இருந்த மரங்களில் 90 சதவீதம் இப்போது அழிந்து விட்டது. இதனால் பருவமழை தவறிப் போய்விட்டது.சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை.

    ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம். அதற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். அதற்கு ஆகும் ரூ.2,000 பணத்தில் 4,000மரக்கன்றுகளை வாங்கி நடுங்கள். இனிமேல் யாருக்காவது எதையாவது பரிசாக அளிக்க வேண்டுமானால், மரக் கன்றுகளைபரிசளியுங்கள்.

    உங்களது தெருக்களில் மரக் கன்றுகளை நட்டு சமூகத்திற்கு சேவையாற்றுங்கள். குப்பைகளை அகற்ற தீவிரமாக உழையுங்கள் என்றார்அஜீத்.

    விரைவில் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவுள்ளாராம் அஜீத்.

    அஜீத்தின் முயற்சிகளுக்கு கைகொடுப்பேமே!


    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X