»   »  அஜித்57 பட டைட்டில் துருவன்?

அஜித்57 பட டைட்டில் துருவன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்டுகள் இங்கே குவிந்துகொண்டிருக்க, இவை பற்றி கவலையேப்படாமல் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறது படக்குழு.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சமீப காலமாக அஜித் படங்களின் டைட்டில்களை அறிவிக்கவே நிறைய காலம் எடுத்துக்கொள்கிறார்கள். பட ரிலீஸ் அளவுக்கு டைட்டில் ரிலீஸுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதையே இப்போது விஜய்யும் ஃபாலோ பண்ண தொடங்கியுள்ளார். தெறி படத்துக்கு அஜித் பாணியில் டைட்டிலை வெளியிட காலம் எடுத்துக்கொண்டார்.

Ajith 57 updates

அஜித்57 படத்துக்கு துருவன் என டைட்டில் இருக்கலாம் என்று ஒரு தகவல் உலவுகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடி காஜல் அகர்வால். ஒரு முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார் என்றார்கள். அக்‌ஷரா நடிப்பது ஒரு சின்ன வேடத்தில்தானாம்.

படம் முழுக்க முழுக்க அஜித்துக்கு மட்டுமே அதிக ஸ்கோப் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இங்கே நடந்த ஒரு குற்றத்தை ஆராயத் தொடங்குகிறார் அஜித். அது சர்வதேச அளவிலான ஒரு பெரிய குற்றத்தை நோக்கி அவரை இழுத்து செல்கிறது. இறுதியில் எல்லா குற்றங்களுக்கும் பின்னணியாக

இருக்கும் வெளிநாட்டு கும்பலை அஜித் அழிப்பதுதான் கதையாம்.

Read more about: ajith, அஜீத்
English summary
Sources say that Ajith's 57th movie has been titled as Thuruvan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil