»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க தீவிரமாகி விட்டார் அஜீத்.

விஜய்க்கு ஒரு காலத்தில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டு, அவர் நடித்த அத்தனை படம் தோல்வியடைந்தன. நெடுநாட்களுக்குப் பின் திருமலை தான் வந்து கை தூக்கி விட்டது. அந்த நிலை இப்போது அஜீத்திற்கும்ஏற்பட்டுள்ளது.

வில்லன் படத்துக்குப் பின்னர் அவர் நடிக்கும் எந்தப் படமும் வெற்றியடையவில்லை. ஜனா, ஆஞ்சநேயா எனமோசமான கதை அமைப்பும், அஜீத்தைவிட அதிக சக்தி வாய்ந்த வசனங்களுமாக வந்த இந்தப் படங்கள் எதுவுமேஓடவில்லை. இதனால் நீண்ட காலத்துக்குப் பின் வில்லன் மூலம் கிடைத்த பிரேக்கை அஜீத்தால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

ஜூனியர் நடிகர்கள் படு பாஸ்ட்டாக மார்க்கெட்டைப் பிடித்துக்கொண்டு விட்டனர். அஜீத்தோ அதைப் பற்றிக்கவலையே படாமல் தானுண்டு தனது ரேஸுண்டு என்று இருந்து விட்டார்.

ரேஸ்களில் பங்கேற்பதற்காக கோடிக்கணக்கில் கடன் (தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் என்ற பெயரில்)வாங்கிவிட்டார்.

இந் நிலையில் இப்போது லேட்டாக விழித்துக் கொண்டுள்ள அஜீத், நடிப்பில் தீவிர கவனம் செலுத்தஆரம்பித்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த 3 படங்களில் இப்போது வேகமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.முடியும் தறுவாயில் உள்ள இந்த மூன்று படங்களையும் வரிசையாக வெளியிட்டு தனது மார்க்கெட்டைபிடித்துவிடலாம் என அஜீத் கணக்கு போடுகிறாராம்.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஜி படத்தையும், தீபாவளியன்று அட்டகாசம் படத்தையும், பொங்கல்தினத்தன்று மிரட்டல் ஆகிய படங்களை வெளியிட அஜீத் முடிவு செய்துள்ளார்.

ஜி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், அட்டகாசத்தில் பூஜாவும், மிரட்டலில் ஆசினும் ஜோடியாகநடித்துள்ளனர்.

ஹிட் படங்களைக் கொடுக்காமல் இருப்பதால், மக்கள் எங்கே தன்னை மறந்து விடுவார்களோ என்ற எண்ணத்தில்இருக்கும் அஜீத், தனது கொள்கைகளை மூட்டி கட்டி வைத்து விட்டு இப்போது ஒரு விளம்பர படத்தில் சிம்ரனுடன்நடிக்கத் தயாராகி விட்டார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil