என்னது...வில்லன் ரோலில் நடிக்க அஜித் ஓகே சொல்லிட்டாரா... அதுவும் இந்த படத்திலா ?
சென்னை : புதிய படம் ஒன்றில் மீண்டும் வில்லன் ரோலில் நடிக்க அஜித் ஓகே சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் எந்த படத்தில் அஜித் வில்லன் ரோலில் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மாஸ் ஹீரோவாக மட்டுமில்லாமல் அவ்வப்போது வித்தியாசமான ரோல்களில் நடிப்பதையும் அஜித் வழக்கமாக கொண்டுள்ளார். வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் சவாலான ரோல்களில் நடித்து, பாராட்டையும் பெற்றுள்ளார் அஜித்.

முந்தைய வில்லன் ரோல்
1999 ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அழகான ரொமான்டிக் ஹீரோவாகவும், காது கேட்காத, வாய் பேச முடியாத அமைதியான வில்லன் ரோலிலும் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார் அஜித். அந்த ரோலுக்கு மிகப் பொருத்தமாக அவர் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய ஹிட்டை தேடி தந்தது.

வில்லத்தனமான போலீஸ்
இதே போல் 2011 ல் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீசாக விநாயக் மகாதேவ் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் அசர வைத்தார் அஜித். மாஸ் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் பெயர் வாங்கிய அஜித், மீண்டும் ஒரு படத்தில் வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதிலும் அஜித் வில்லனா
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித், ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணி இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தான் வில்லன், ஹீரோ என இரு ரோல்களில் அஜித் நடிக்க போகிறாராம். இது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

இரட்டை வேடத்தில் அஜித்
பிப்ரவரி மாதத்தில் ஏகே 61 ஷுட்டிங் துவங்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. அதனால் ஏகே 61 ல் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள தகவல் விரைவில் உறுதி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏகே 61 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஏகே 61 ஷுட்டிங்கை விரைவில் முடிக்க போனி கபூரும் படக்குழுவிடம் ஏற்கனவே கூறி உள்ளதால், ஏகே 61 படத்தை முடித்து விட்டு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த அஜித்தும் திட்டமிட்டுள்ளாராம். இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் இரட்டை வேடத்தில், அதிலும் வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் ஏகே 61 பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கி விட்டது.


Click it and Unblock the Notifications











