»   »  அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்!

அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘கடும் முயற்சி பண்ணுவதை விட இப்படியே பண்ணினாலே போதும்' என நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு நடிகர் அஜீத் அறிவுரை கூறியுள்ளாராம்.

'காக்கி சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது 'ரஜினி முருகன்' என்ற படத்தில் நடித்து வரும் அவர், புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்டு வருகிறார்.

Ajith appreciates sivakarthikeyan

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது, அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் அவர், ‘நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்" என அஜீத் வாழ்த்தியதாக கூறியிருக்கிறார். மேலும், "கடும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என தான் கூறியதற்கு, ‘அதெல்லாம் பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க' என அஜீத் அறிவுரை சொன்னதாக தெரிவித்துள்ளார்.

அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன அறிவுரையால் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

English summary
In a recent interview, actor Sivakarthikeyan has said that actor Ajith has advised him, to continue his acting style and not try to change anything.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil