»   »  என்னை அறிந்தால்... "பன்ச்சைக்" குறைக்கச் சொன்ன அஜீத்!

என்னை அறிந்தால்... "பன்ச்சைக்" குறைக்கச் சொன்ன அஜீத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னை அறிந்தால் படத்தின் கதையைக் கேட்ட பிறகு, த்ரிஷாவுக்காக தன் கதாபாத்திரத்தையே விட்டுக் கொடுத்துவிட்டாராம் அனுஷ்கா.

அஜித் - த்ரிஷா - அனுஷ்கா நடிக்க, கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படம், வரும் பிப்ரவரி 5-ம் தேதி திரைக்கு வருகிறது.


ஒரு மனிதனின் வாழ்க்கை...

ஒரு மனிதனின் வாழ்க்கை...

இந்தப் படம் குறித்து செய்தியாளர்களிடம் கவுதம் மேனன் கூறுகையில், "என்னை அறிந்தால்' படத்தின் கதை, ஒரு மனிதனின் வாழ்க்கை பயணம் என்று சொல்லலாம். அஜித்குமார் பல தோற்றங்களில் நடித்து இருக்கிறார்.


பஞ்சைக் குறைங்க...

பஞ்சைக் குறைங்க...

படத்தில், நிறைய ‘பஞ்ச்' வசனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை மிகையாக இருப்பதாக அஜித் கருதியதால், குறைக்கப்பட்டது. ஆனாலும், படம் பார்க்கும் போது ரசிகர்கள் கைதட்டும் வகையில், ‘பஞ்ச்' வசனங்கள் உள்ளன.


எந்தவாடுகாணி

எந்தவாடுகாணி

படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தெலுங்கில் இந்த படத்துக்கு, ‘எந்தவாடுகாணி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வகையில், படத்தின் முடிவு அமைக்கப்பட்டுள்ளது.


இரண்டு க்ளைமாக்ஸ் இல்லை

இரண்டு க்ளைமாக்ஸ் இல்லை

படத்தில், ஒரே ‘கிளைமாக்ஸ்'தான். இரண்டு ‘கிளைமாக்ஸ்'சை படமாக்கவில்லை. அது வெறும் வதந்திதான். ஒரு பாடல் காட்சி நியூயார்க், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது.


த்ரிஷா-அனுஷ்கா

த்ரிஷா-அனுஷ்கா

படத்தில், த்ரிஷா-அனுஷ்கா என இரண்டு பெரிய கதாநாயகிகள் இருக்கிறார்கள். என்றாலும், அவர்களால் பிரச்சினை எதுவும் இல்லை. இருவருக்கும் இடையே யார் பெரியவர்? என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படவில்லை.


விட்டுக் கொடுத்தார்

விட்டுக் கொடுத்தார்

த்ரிஷாவிடம் கதை சொன்னபோது, அனுஷ்கா கதாபாத்திரம் பற்றி விசாரித்தார். விஷயம் கேள்விப்பட்ட அனுஷ்கா, 'வேண்டுமானால், என் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கட்டும்' என்று விட்டுக் கொடுக்க முன்வந்தார்.


டைட்டில்

டைட்டில்

டைட்டிலில் யார் பெயர் முதலில் வரும் என்பதில் எந்த சிக்கலும் இல்லை. இரண்டு பேரில் யார் சீனியரோ, அவர் பெயர் டைட்டிலில் முதலில் வரும்," என்றார்.


English summary
Director Goutham Menon says that Ajith requested him to reduce punch dialogues in Yennai Arinthaal.
Please Wait while comments are loading...