»   »  பழைய பன்னீர்செல்வமாக மாறிய 'தல': வைரலாகும் புகைப்படங்கள்

பழைய பன்னீர்செல்வமாக மாறிய 'தல': வைரலாகும் புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் மறுபடியும் பழைய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறாராம்.

அஜீத்

அஜீத்

விசுவாசம் அறிவிப்பு வெளியான பிறகு அஜீத் கருப்பு நிற முடியில் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் அப்பாடி தல ஒரு வழியாக டை அடித்துவிட்டார் என்று மகிழ்ந்தார்கள்.

ஷாலினி

தற்போது அஜீத் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அஜீத் பழையபடி சால்ட் முடி, தாடியுடன் உள்ளார்.

ரசிகர்கள்

தல கருப்பு முடியில் இருந்தாலும் சரி, வெள்ளை முடியில் இருந்தாலும் சரி எங்களுக்கு மகிழ்ச்சியே என்று கூறி அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கியுள்ளனர்.

மகள்

மகள்

அனோஷ்காவின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜீத்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக மகனின் பள்ளி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Latest pictures of Ajith with Shalini and Anoushka have gone viral on social media. Ajith attended daughter's school function. Earlier he attended son's school function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil