»   »  சால்ட் அன் பெப்பர் லுக்… பாலிவுட், ஹாலிவுட் ஹீரோக்களை முந்திய ‘தல’ அஜீத்

சால்ட் அன் பெப்பர் லுக்… பாலிவுட், ஹாலிவுட் ஹீரோக்களை முந்திய ‘தல’ அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் ஹீரோக்கள்தான் எப்பவுமே பெஸ்ட் என்ற ஒரு பேச்சு அடிபடும். ஆனால் பாலிவுட் ஹீரோக்களான அமீர்கான், அக்ஷய் குமார், மிலிந் சோமன், ஹாலிவுட் ஸ்டார் ஜார்ஜ் குலூனி ஆகியோரை விட நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜீத்தான் பெஸ்ட் என்று ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

ஹீரோக்களில் சால்ட் அன் பெப்பர் லுக் யாருக்கு பெஸ்ட் என்று பாலிவுட் இணையதளம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது.

சால்ட் அன் பெப்பர் லுக்

சால்ட் அன் பெப்பர் லுக்

அமீர்கான், அக்ஷய் குமார், மிலிந்த் சோமன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனி,கோலிவுட் ஸ்டார் அஜீத் குமார் ஆகியோர் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றிருந்தனர்.

தல அஜீத்துக்கு அதிக ஓட்டு

தல அஜீத்துக்கு அதிக ஓட்டு

இந்த கருத்துக்கணிப்பில் அஜீத்திற்கு 78 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது மங்காத்தா படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நடித்து அசத்தினார் இந்த ஸ்டைல் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்போது ஆரம்பம் படத்திலும் அதே ஸ்டைலில் நடித்தார் அஜீத்.

வீரம் படத்திலும்

வீரம் படத்திலும்

இதனையடுத்து வீரம் படத்திலும், என்னை அறிந்தால் படத்திலும் சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடித்து அசத்தினார் அஜீத். இது ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அக்ஷய் குமார் - அமீர்கான்

அக்ஷய் குமார் - அமீர்கான்

அஜீத்திற்கு அடுத்தபடியாக அக்ஷய் குமாருக்கு 14.96 சதவிகிதம் பேரும், அமீர்கானுக்கு 2.06 சதவிகிதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். மிலிந்த் சோமனுக்கு வெறும் 0.92 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர்.

பாலிவுட் ஹீரோக்கள்

பாலிவுட் ஹீரோக்கள்

பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் சால்ட் பெப்பர் ஸ்டைலில் தோன்றினார். இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ‘டாங்கள்' படத்தில் தோன்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் ஹீரோ

ஹாலிவுட் ஹீரோ

ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனி க்ரே ஹேர் ஸ்டைலில் அசத்தலாக தோற்றமளிப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அவரது இந்த ஸ்டைல்தான் அதிக ரசிகர்களை கவர்கிறதாம். ஆனால் பாலிவுட் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் அவருக்கு 3.92 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

தல ரசிகர்கள் உற்சாகம்

தல ரசிகர்கள் உற்சாகம்

பாலிவுட், ஹாலிவுட் ஹீரோக்களை ஸ்டைலில் அஜீத் முந்தியதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

English summary
Ajith's popularity among netizens is well known and he has once again proved that he enjoys a good fan following on the internet as he beat Aamir Khan and Akshay Kumar with highest votes in a poll conducted by a Bollywood website.
Please Wait while comments are loading...