»   »  கழுத்தில் அடிபட்டும் கண்டுக்காம நடித்த அஜீத்… என்னே ஒரு தொழில் பக்தி!!

கழுத்தில் அடிபட்டும் கண்டுக்காம நடித்த அஜீத்… என்னே ஒரு தொழில் பக்தி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத் நடித்து வரும் 56 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் வில்லன் கபீர் சிங்குடன் மோதும் சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்த போது அஜீத்துக்கு திடீரென கழுத்தில் காயம் ஏற்பட்டதாம். மருத்துவர் சிகிச்சை அளித்தும் அஜீத்துக்கு கழுத்தில் வலி இருந்ததாகவும், அந்த வலியை பொருட்படுத்தாமல் சூட்டிங்கில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

படப்பிடிப்பில் அஜீத்திற்கு காயம் ஏற்படுவது ஒன்றும் புதிய விசயமில்லை. படப்பிடிப்பில் அஜீத் காயம் அடைவது இது ஒன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே பில்லா மற்றும் ஆரம்பம் காட்சிகளின் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளிலும் டூப் போடாமல் நடிப்பதாலேயே சிலசமயங்கள் அவர் காயமடைவதாகவும் கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில்

சிறுத்தை சிவா இயக்கத்தில்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட அஜித்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

நோ சொன்ன அஜீத்

நோ சொன்ன அஜீத்

சிகிச்சைக்குப் பின்னரும் அஜீத்திற்கு வலி அதிகரித்துள்ளது. எனவே அஜித்தை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அஜித் ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார்.

தயாரிப்பாளருக்கு நஷ்டம்

தயாரிப்பாளருக்கு நஷ்டம்

படப்பிடிப்பை ரத்து செய்து ஓய்வெடுத்தால் தயாரிப்பாளருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று நினைத்தே அஜித் படப்பிடிப்பில் பங்கேற்றாராம். இதைப் பார்த்த படக்குழுவினர் அஜித்தின் தொழில் பக்தியை பற்றி பேசி வருகின்றனர்.

அஜீத் ஸ்ருதிஹாசன்

அஜீத் ஸ்ருதிஹாசன்

அஜீத்,ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, கபீர்சிங், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தை வெற்றி ஒளிப்பதிவு செய்ய ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

எல்லா படப்பிடிப்பிலும் காயம்தான்

எல்லா படப்பிடிப்பிலும் காயம்தான்

பில்லா படப்பிடிப்பின் போது கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல மங்காத்தா படப்பிடிப்பின் போது காலில் சுளுக்கு ஏற்பட்டது. இப்போது கழுத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொழில் பக்தியால் காயத்தை கண்டு கொள்ளாமல் நடித்து கொடுத்து விட்டார் அஜீத்.

ஒருவேளை இதுவும் ஒரு விளம்பரமோ?

English summary
Ajith Kumar sprained his neck while shooting for an action sequence. Since the injury was minor, he completed the shot without taking a break, according to a source.
Please Wait while comments are loading...