அட நம்ம தல அஜித்துக்கு இவ்வளவு பெரிய மகளா... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை : சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் அஜித், பொது இடங்களில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருக்கக் கூடியவர். இருந்தாலும் அவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்காக பயிற்சி எடுப்பது, பைக்கில் உலகை சுற்றி வருவது, இந்தியா டூர் சென்று வந்தது என அஜித் கண்ணில் படும் இடங்களில் ஃபோட்டோ எடுத்து, ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

Recommended Video

Thala Ajith & Dhanush-க்கு இவ்ளோ பெரிய பசங்களா | Anoushka Ajith, Yatra dhanush

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா உலகமே அஜித்தின் வலிமை படம் எப்போது ரிலீசாகும் என காத்திருக்கிறது. போனி கபூர் தயாரிப்பில், ஹச்.வினோத் இயக்கி உள்ள இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஊர் சுற்றிய அஜித்

ஊர் சுற்றிய அஜித்

வலிமை படத்தில் நடித்து முடித்த கையோடு பைக்கில் இந்தியாவை சுற்றி வர துவங்கி விட்டார். பிஎம்டபிள்யூ பைக்கில் அஜித் தார் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த ஃபோட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

அஜித்தின் தீபாவளி கொண்டாட்டம்

அஜித்தின் தீபாவளி கொண்டாட்டம்

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன், அஜித் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஃபோட்டோ வெளியாகி வைரலாகின. இதில் அஜித் மிக எளிமையாக சிறப்பு நிற சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்தார். இதனை அஜித் ரசிகர்கள் புகழ்ந்து தீர்த்தனர்.

தீபாவளி ஸ்பெஷல் ஃபோட்டோ

தீபாவளி ஸ்பெஷல் ஃபோட்டோ

மனைவி ஷாலினி, நண்பர்கள் உள்ளிட்டோருடன் அஜித் தீபாவளி கொண்டாடிய ஃபோட்டோக்கள் அனைவரையும் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து ஷாலினி மற்றும் அஜித்தின் மகன் இருவரும் அண்ணாத்த படம் பார்த்த ஃபோட்டோக்கள், ஷாலினி மற்றும் ஷாமிலி இணைந்து தீபாவளி ஸ்பெஷலாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் ஆகியன வெளியாகி பரபரப்பாகின.

அஜித் மகளா இது

அஜித் மகளா இது

இந்நிலையில் தற்போது அஜித்தின் மகள் அனவ்ஷ்கா, அம்மா ஷாலினி மற்றும் சித்தி ஷாமிலியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஃபோட்டோவை அஜித்தின் தீவிர ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதை பார்த்து விட்டு, அஜித்திற்கு இவ்வளவு பெரிய மகளா. என்னமா வளர்ந்துட்டார் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

அப்பா போலவே பொண்ணு

அப்பா போலவே பொண்ணு

இந்த ஃபோட்டோவில் மூன்று பேரும் தோழிகள் போன்று காட்சி தருவதும், அஜித் மகள் கண்ணாடி அணிந்திருப்பதும், அச்சு அசலாக அப்பா அஜித்தின் இளமை கால ஜாடையில் இருப்பதும் அனைவரின் ஆச்சரியத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X