»   »  தலையில் தூக்கி வைத்து ஆடுவதை விரும்பாதவர் அஜீத்: கௌதம் மேனன்

தலையில் தூக்கி வைத்து ஆடுவதை விரும்பாதவர் அஜீத்: கௌதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவர் சீன், பஞ்ச் வசனத்தை விரும்பாதவர் அஜீத் குமார் என இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா, அனுஷ்கா என 2 ஹீரோயின்கள் உள்ள இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அஜீத் பற்றி கௌதம் மேனன் கூறுகையில்,

அஜீத்

அஜீத்

அஜீத் மிகவும் நட்புடன் பழகுபவர். அவர் பெரிய ஸ்டாராக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ள மாட்டார்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

நான் பொதுவாக குறிப்பிட்ட ஹீரோவுக்காக கதையை தயார் செய்வேன். என்னை அறிந்தால் படத்தின் கதை அஜீத் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகே உருவானது.

கமர்ஷியல்

கமர்ஷியல்

என்னை அறிந்தால் கமர்ஷியல் படம். அதில் எமோஷன், சென்டிமென்ட், திகில், காதல், ஆக்ஷன் உள்ளது.

இமேஜ்

இமேஜ்

அஜீத் பெரிய நடிகர் என்பதால் படத்தில் அவர் இமேஜை மெயின்டெய்ன் பண்ண வேண்டும் என்ற அழுத்தமே இல்லை. அவருக்கு ஓவர் சீன், அவரை கடவுள் ரேஞ்சுக்கு காட்டுவது, பஞ்ச் வசனம் எல்லாம் பிடிக்காது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

என்னையும், எனது ரசிகர்களையும் திருப்திபடுத்த எந்த காட்சியையும் வைக்க வேண்டாம் என்று அஜீத் என்னை கேட்டுக் கொண்டார் என்றார் கௌதம் மேனன்.

English summary
Yennai Arindhal director Gautham Menon told that Ajith does not like over-the-top dialogues or portrayal of him like a messiah.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil