»   »  அஜீத் அடங்கவே மாட்டார்: பல்கேரியா போய் மீண்டும் ஆரம்பிச்சுட்டார்

அஜீத் அடங்கவே மாட்டார்: பல்கேரியா போய் மீண்டும் ஆரம்பிச்சுட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கலந்து கொண்டுள்ளார்.

Ajith does stunt in a bike in Bulgaria

அஜீத்துக்கு பைக் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பல்கேரியாவிலும் அவர் பைக்கில் சாகசம் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை பைக் வெறியரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜோரியான் அஜீத் பற்றி கூறியிருப்பதாவது,

இந்தியாவில் பெரிய நடிகரான மிஸ்டர் அஜீத் குமாரின் டபுளாக நடிக்க பெருமைப்படுகிறேன். அவர் என் பைக்கில் சாகசம் செய்கிறார். அவரின் எளிமையை பார்த்து வியக்கிறேன். இதை அதிகாலை 3 மணிக்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
Ajith does it again, this time in Bulgaria. Yes, Ajith did stunt in a bike while shooting for Thala 57.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil