»   »  லண்டனில் இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கப் போகும் அஜீத்

லண்டனில் இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கப் போகும் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள அஜீத், சென்னையில் ஓய்வெடுத்தது போதும் என்று லண்டனுக்குக் கிளம்புகிறார்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வேதாளம்'. ரசிகர்கள் மத்தியில் வெற்றியைப் பெற்றது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காலில் அடிப்பட்டது. ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால், சில நாட்களுக்கு முன்னர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

ஓய்வு

ஓய்வு

தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஜித், தனது அடுத்த பட வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரமாண்ட படம்

பிரமாண்ட படம்

இந்தப் படத்தை பிரமாண்டமாக உருவாக்குகிறார்கள். இதில் அஜீத்துடன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

சிவா

சிவா

அஜீத்தை வைத்து வீரம், வேதாளம் படங்களை எடுத்த சிவாதான் இந்தப் படத்தையும் இயக்கப போகிறார். படத்தின் திரைக்கதை அமைப்புப் பணிகளில் அவர் தீவிரமாக உள்ளார்.

லண்டன்

லண்டன்

இத்தனை நாட்கள் சென்னையில் ஓய்வெடுத்து வந்த அஜீத், அடுத்து லண்டன் செல்ல இருக்கிறார். லண்டனில் இரண்டு மாதம் ஓய்வெடுக்கிறார். கூடவே அடுத்த பட திரைக்கதையை மேம்படுத்தும் பணியிலும் கவனம் செலுத்தப் போகிறாராம். சென்னை திரும்பியதும் இந்தப் படம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

சத்யஜோதி

சத்யஜோதி

ஆரம்பம் படத்திலிருந்து அஜீத் நடித்த மூன்று படங்களை தொடர்ந்து ஏஎம் ரத்னம் தயாரித்தார். இப்போது அஜீத் நடிக்கும் புதுப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

English summary
Ajith is planning to go London to take rest for the next two months.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil