»   »  அஜீத்துக்கு ரஜினியின் அட்வைஸ்!

அஜீத்துக்கு ரஜினியின் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil
Ajith with Rajini
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆலோசனையின்படி அஜீத், புதிதாக ஒரு வைர மோதிரத்தையும், தங்க பிரேஸ்லெட்டையும் அணிய ஆரம்பித்துள்ளார்.

ரஜினி நடித்த மெகா ஹிட் படமான பில்லாவின் ரீமேக்கில் நடித்து அதை ஹிட் ஆக்கிய சந்தோஷத்தில் இருந்த அஜீத், சமீபத்தில் தந்தையாகி மேலும் உற்சாகமானார்.

இந்த நிலையில் ரஜினியின் அட்வைஸை ஏற்று புதிதாக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

முன்பெல்லாம் அஜீத் கையில் பிரேஸ்லெட், மோதிரம் போன்றவற்றைப் பார்க்க முடியாது. ஆனால் இப்போது அவரது வலது கையில் வைர மோதிரமும், தங்க பிரேஸ்லெட்டும் மின்னுகின்றன. என்ன விஷயம் என்று ஆராய்ந்தபோது, ரஜினி சொல்லித்தான் இதை அவர் அணிந்துள்ளதாக தெரிய வந்தது.

அஜீத்துக்கு நெருக்கமான சிலர் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், பில்லா படத் தொடக்கத்தின்போதுதான் ரஜினி இதுதொடர்பான அட்வைஸைக் கொடுத்தாராம். இதையடுத்தே அவற்றை அணிய ஆரம்பித்துள்ளாராம் அஜீத்.

அஜீத் - ஷாலினி பெற்றோர் ஆனவுடன் தொலைபேசியில் வாழ்த்து சொன்ன ரஜினி, குழந்தையுடன் ஒரு நாள் வீட்டுக்கு வருமாறும் அழைத்துள்ளாராம்.

அஜீத்துக்கு ரஜினி வேறு சில அட்வைஸ்களையும் கொடுத்துள்ளாராம். மன அமைதி, சாந்தம் உள்ளிட்டவற்றை நமக்குள் கொண்டு வருவது குறித்த அட்வைஸ்களாம் அவை. மேலும் தி ஹிமாலயன் மாஸ்டர் என்ற நூலையும் அஜீத்திடம் கொடுத்து படிக்கக் கூறியுள்ளாராம். அதில் மனதை கட்டுப்படுத்துவது, அமைதியை கொண்டு வருவது ஆகியவற்றுக்கான வழிகள் அழகாக சொல்லப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையே, பில்லா ரீமேக் சந்தோஷத்தில் இருக்கும் அஜீத், அடுத்து ரஜினியின் தீ படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஒப்புதலை ரஜினியிடமிருந்து அவர் பெற்று விட்டாராம். தீ படத்தில் ரஜினியும், சுமனும் அண்ணன் தம்பியாக நடித்திருந்தனர். ஆனால் அந்த இரு ரோல்களையும் அஜீத்தே செய்யவுள்ளாராம்.

தூள் பறத்துங்க ஜி!

Please Wait while comments are loading...