»   »  நடிகர் விஷ்ணுவுக்கு அஜீத் தந்த இன்ப அதிர்ச்சி

நடிகர் விஷ்ணுவுக்கு அஜீத் தந்த இன்ப அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நடிகர் விஷ்ணுவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் அஜீத்.

வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு. தொடர்ந்து ‘குள்ளநரி கூட்டம்', ‘நீர்ப்பறவை', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜீவா' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் திறமையான கிரிக்கெட் வீரரும் கூட.

Ajith gives sweet shock to Vishnu

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்கு சிக்ச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணுவுக்கு வலது கையில் உலோகத் தகடு பொருத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு 2014ம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், விஷ்ணுவின் வலது கையில் எலும்பு கூடிவிட்டதால், பொருத்தப்பட்ட உலோகத் தகடு மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

விஷ்ணுவிற்கு சிகிச்சை பார்த்த அதே மருத்துவமனையில்தான் ஷாலினிக்கு சில தினங்களுக்கு முன் இரண்டாவது குழந்தையின் பிரசவம் நடைபெற்றது.

இதனிடையே விஷ்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அஜித், உடனே அவரை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஷ்ணுவிடம் உடல் நலம் குறித்தும் விசாரித்துள்ளார். இதுபற்றி விஷ்ணு கூறும்போது, அஜித் வந்து என்னை பார்த்தது நலம் விசாரித்தது எனக்கும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அஜித் ஒரு எளிமையான இனிமையான மனிதர்,' என்றார்.

English summary
Actor Ajith has gave a sweet shock to actor Vishnu by visiting him in a private hospital and inquired about his health.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil