»   »  இட்லியோ இட்லி: இது அஜீத்துன்னு சொன்னால் அஜீத்தே நம்ப மாட்டாரேப்பா!

இட்லியோ இட்லி: இது அஜீத்துன்னு சொன்னால் அஜீத்தே நம்ப மாட்டாரேப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் பாசத்துடன் செய்துள்ள அஜீத் இட்லி பார்க்க அவரை போன்றே இல்லை.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க தல ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜீத் நண்பர்கள் சார்பாக அஜீத்தின் உருவத்தில் 57 கிலோ எடை கொண்ட இட்லியை உருவாக்கியிருக்கிறார்கள். அதை பாரத் தியேட்டர் முன்பு வைக்க உள்ளனர்.

Ajith Idli doesn't look like him at all

இட்லியில் இருக்கும் உருவம் அஜீத் என்றால் அஜீத்தே நம்ப மாட்டார். முன்பு அஜீத்துக்காக ரசிகர்கள் செய்த சிலையும் அவரை போன்று இல்லை. இதை பார்த்த 'அந்த' நடிகரின் ரசிகர்களோ செம கலாய் கலாய்த்தனர்.

அஜீத் இட்லியை பார்த்து குஷியாகி ஏற்கனவே மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர் அவர்கள். தல ரசிகர்களே உங்கள் பாசம் புரிகிறது ஆனால் பார்க்க கொஞ்சமாவது அஜீத் மாதிரி இருக்கணும்லப்பா!

English summary
Ajith fans have made a mega idli weighing 57 kilos ahead of Vivegam release. Sadly the image in the idli doesn't looke like thala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil